எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,ஆக.26  சுற்றுச்சூழல் காற்றுமாசு காரணமாக இந்தியர் களின் ஆயுள் காலத்தில் சுமார் ஒன்றரை ஆண்டு குறைவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுத் தகவலில் கூறப்பட் டுள்ளது.

உலகளவில் காற்று மாசுபாடானது மனிதர்களின் ஆயுளில் எத்த கைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இது என்று கூறப்பட்டுள்ளது. டெக் சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவின்படி, காற்றில் உள்ள நுண்ணிய மாசுகள் காரணமாக, மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன.

காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுள் 1.53 ஆண்டு வரையில் குறைகிறது. வங்கதேச மக்களின் ஆயுள்காலம் 1.87 ஆண்டு வரையிலும், எகிப்தியர்களின் ஆயுள் 1.85 ஆண்டு வரையிலும், பாகிஸ்தானியர்களின் ஆயுள் 1.56 ஆண்டு வரையிலும், சவூதி அரேபியர்களின் ஆயுள் 1.48 ஆண்டு வரையிலும், நைஜீரியர்களின் ஆயுள் 1.28 ஆண்டு வரையிலும், சீனர்களின் ஆயுள் 1.25 ஆண்டு வரையிலும் குறைகிறது.

அதேபோல், உலக அளவிலான காற்றுத் தரமானது உலக சுகாதார அமைப்பின் தர கட்டுப்பாடுகளுக்கு உள்பட்ட அளவில் இருக்கும் பட்சத்தில், உலகளவில் மக்களுக்கான ஆயுள்காலம் சராசரியாக 0.59 ஆண்டு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளில் அதன் பலன் அதிகமாக இருக்கும். காற்றில் உள்ள நுண்ணிய மாசுகளால் (பிஎம் 2.5), மாரடைப்பு, பக்கவாதம், சுவாசப் பிரச்னைகள், புற்றுநோய் ஆகிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  அந்த ஆய்வுக்காக, காற்றில் உள்ள நுண்ணிய மாசுகளின் தாக்கத்தையும், 185 நாடுகளில் அதன் பாதிப்பையும் கண்டறிவதற்காக உலகளாவிய நோய்கள் ஆய்வு அறிக்கையின் தகவல்கள் பயன் படுத்தப் பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner