எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக எம்எல்ஏ குல்தீப்பைக் காப்பாற்ற சதி?

உன்னாவ், ஆக. 26 -உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில், சிபிஅய் தரப்பு முக்கியச் சாட்சி திடீரென மரணம் அடைந் துள்ளார். மேலும் அவரது உடல் அவசர அவசரமாக அடக் கமும் செய்யப்பட்டிருப்பது, சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிஒருவர், தன்னை பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ-வான குல்தீப் சிங்செங்கார், வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்த எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்புசிங்கை கடுமையாக தாக்கி, குற்றுயிரும் குறையுயிருமாக ஆக்கினர். காவல்துறையினரும், பப்பு சிங்கையே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சில நாட்களிலேயே சிறைக்குள் பப்புசிங் இறந்தார். சிறுமியின் அவலத்தை உணர்ந்த நீதிமன்றம், தானாகவே முன்வந்து, இந்த வழக்கை சிபிஅய்-யிடம் ஒப்படைத்தது. எம்எல்ஏ குல்தீப் சிங், அவரது உதவி யாளர் சாஷி சிங் உள்ளிட்டோரை சிபிஅய் அதிகாரிகள் கைது செய்தனர். வல்லுறவுவழக்கில் குல்தீப் சிங் குற்றவாளி என்றும் அண்மையில் அவர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில்தான், சிறுமியின் தந்தை அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில்முக்கிய சாட்சியான யூனுஸ் (30) என்ற இளைஞர், கல்லீரல் பாதிப்பால் திடீரென மரணம் அடைந்ததாக காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

யூனுஸ் மரணம் இயற்கைதான் என்றால், அவசர அவசர மாக ஏன் புதைக்கவேண்டும்; முக்கிய சாட்சியான யூனுஸின் உடலை காவல்துறையினர் ஏன், பிரேத பரிசோதனை செய்யவில்லை என்று சிறுமியின் மாமா கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும், யூனுஸ் இறந்தது பற்றி சிபிஅய்க்கு மட்டு மன்றி, அவரது குடும்பத்திற்கும் கூட தகவல் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியிருக்கும் அவர், யூனுஸ் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு மற்றும் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை தப்பவிடு வதற்கான சதி, இந்த மரணத்தின் பின்னால் இருப்பதாகவும், இதற்காக யூனுஸின் சகோதரரை பாஜக-வினர் பயன்படுத்து வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இந்த குற்றச் சாட்டை உறுதிப்படுத்துவது போலவே, என் சகோதரர் உடலை தோண்டி எடுக்க அனுமதிக்கமாட்டேன் என்று யூனுஸின் சகோதரர் ஜான் மொகமது கூறியுள்ளார்.இது ஒருபுறமிருக்க, முக்கியச் சாட்சி யூனுஸ் இறந்தது பற்றி, சிபிஅய் இதுவரை தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner