எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.26  சமையல் எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய எண் ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா எண் ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, வங்கதேசத்திலிருந்து மட்டும் தினமும் 800-1,000 டன் அளவுக்கு ஆர்பிடி பாமாயில் மற்றும் சோயா எண்ணெய் இறக்குமதியாகிறது.

இவ்வகை சமையல் எண் ணெய்கள் அனைத்தும் டேங்கர் லாரியில் ஏற்றப்பட்டு மேற்கு வங்கம் மற்றும் அசாம் எல்லை வழியாக கொண்டு வரப்படுகிறது.

லாரிகளில் கொண்டு வரப்படும் சமையல் எண்ணெயின் தரத்தை மதிப்பீடும் எதுவும் செய்யாமல் சுங்க அதிகாரிகள் ஒரே நாளில் அவற்றை விடுவித்து விடுகின் றனர்.

பொதுவாகவே சமையல் எண்ணெய்யின் தரத்தை பரிசோ திக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு குறைந்தபட்சம் 4-7 நாட்கள் தேவைப்படும்.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யின் தரத்தை பரிசோதிக்காமல் விடுப் பது என்பது தீவிரமான சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்.

அவற்றை பயன்படுத்தும் மக்களின் உடல் ஆரோக்கியத் துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

எனவே, மத்திய அரசு, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சாலைகள் வழியாக இறக்குமதி செய்யப்படும் சமையல் எண் ணெயை கட்டுப்படுத்தி பரிசோ தித்து ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம், தெற்காசிய தடையற்ற வர்த்தகத்தின் கீழ் விதிமுறைகள் ஏதும் மீறப்படுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்இஏ

தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பு இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.

இதற்காக, இந்தியா 1.4 கோடி டன் சமையல் எண்ணெயை இறக் குமதி செய்து கொள்வது குறிப் பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner