எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை,  ஆக.26 கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் காரணமாக டயர் தயாரிப்பு நிறு வனங்களின் லாப வரம்பு 1.5%-2% குறைய வாய்ப்புள்ளது ஆய் வின் மூலமாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இந்தியா ரேட் டிங் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ள தாவது:  உள்நாட்டில் உற்பத்தி செய் யப்படும் இயற்கை ரப்பர், இங் குள்ள டயர் தயாரிப்பு நிறுவனங் களின் 50 சதவீத ரப்பர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி யாகும் இயற்கை ரப்ப ரில் 90 சதவீத பங்களிப்பை கேரளா மட்டுமே வழங்கி வருகிறது.

தற்போது அங்கு அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் இயற்கை ரப்பர் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்நாட்டு தேவைக்கு பற்றாக் குறை ஏற்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.  இதனால், லாப வரம்பு குறைய வாய்ப்புள்ளது.


உற்பத்தித் திறன் உச்சி மாநாடு

சென்னை, ஆக.26 இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (மிவிஜிவிகி) தேசிய உற்பத்தித்திறன் உச்சிமாநாட்டின் 12ஆவது பதிப்பு 24.8.2018 அன்று நடைபெற்றது. உச்சி மாநாட்டை முருகப்பா குழுமத்தின் நிறைவேற்றுத் தலைவர் எம்.எம்.முருகப்பன் மற்றும் யுகால் ஃப்யூயல் சிஸ்டம்ஸ் டைரக்டர் டாக்டர் வி.சுமந்திரன் ஆகியோர் துவக்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் பேசிய மிவிஜிவிகி தலைவர் பி. ராமதாஸ்:- “தொழில்துறை 4.0 உடன் சுற்றியுள்ள தொழில்நுட்பங்களைப் பொறுத்து ஒரு நிலை யான போட்டி நன்மைகளை உருவாக்குவதன் மூலம் செலவினங்களைக் குறைப்பதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இப்போது உடனடியாக உள்ளது என்றுதெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner