எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 26- திருமாவளவனுக்கு முனைவர் பட்டத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கியது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில்    ’Mass Religious conversion at Meenakshipuram; A victimological Analysis’’  என்ற தலைப்பில் தொல்.திருமாவளவன் மேற்கொண்ட முனைவர் பட்டம் (பிஎச்டி) ஆய்வு அறிக்கையை பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்திருந்தார். நேற்று முன்தினம்(24ஆம் தேதி) பல்கலைக்கழகத்தில் வாய்மொழித் தேர்வு நடை பெற்றது. அத்தேர்வில் பங்கேற்று தனது ஆய்வை விளக்கி உரையாற் றினார்.

டில்லியில் இருந்து வந்திருந்த தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் பதிவாளரும் குற்றவியல் துறையின் பேராசிரியரும், வாய்மொழித் தேர்வின் கண்காணிப்பாளருமான பாஜ்பாய், திருமாவளவனின் ஆய்வு நெறியாளரும், பேராசிரியருமான சொக்கலிங்கம் மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களும், மாணவர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு திருமாவளவன் பதில் அளித்தார். முனைவர் பட்ட ஆய்வில் திருமாவளவன் தேர்ச்சி பெற்றதாக தேர்வாளர்கள் அறிவித்தனர். பின்னர் பல் கலைகழக துணைவேந்தர் பாஸ்கர், திருமாவளவனின் ஆய்வு நெறியாளரும், முன்னாள் துணைவேந்தர் சொக்கலிங்கமும் முனைவர் பட்ட சான்றிதழை வழங்கினர்.

கேரள வெள்ளத்தில் இழந்த சான்றிதழ்கள் அந்தந்த மய்யங்களில் கிடைக்க ஏற்பாடு

திருவனந்தபுரம், ஆக. 26- பெருவெள்ளத்தில் இழந்த ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற முக்கியஅடையாள அட் டைகளை இழந்தோருக்கு அந்தந்த மய்யங்களில் வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரளமுதல்வர் பின ராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் தகவல் தொழில்நுட் பத்துறை மற்றும் பிற துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் அமலாக்கப்படும். இதற்கான மென்பொருள் தயாரிப்புப் பணி துரிதமாக நடந்து வருவதாகவும்அவர் கூறினார்.அடையாள அட்டைகளை பெயர், முகவரி, பின்கோடு, வயது, தொலைபேசி எண் போன்ற அடிப்படை விவரங்கள், விரல் ரேகைகள் போன்ற அடையாளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி முக்கிய அடையாளங்களை அரசின் பல்வேறு அமைப்புகளிலிருந்து மீட்டெடுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பெயரிலும் மற்ற விவரங்களிலும் வேறுபாடுகள் இருந்தா லும் கண்டுபிடிக்க சாத்தியமாகும் விதமாக இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும் அதாலத்துகள் வழியாக குடிமக்கள் இழந்துள்ள அடையாளங்களை மீட்டெடுத்து விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக அனைத்து அரசுத் துறைகளும் தங்களிடம் உள்ள தகவல்களோடு தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை அடிப்படையிலான நடவடிக்கைஆகஸ்ட் 30 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சியின் ஒரு வார்டில் செயல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

பட்டேல் இனத்தவருக்கு இட இதுக்கீடு கோரி மீண்டும் பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்தார் அர்திக் பட்டேல்

அகமதாபாத், ஆக. 26- குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் அர்திக் பட்டேல் கடந்த 2015ஆ-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர்.

அந்த போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று அந்த இயக்கத்தின் சார்பில் குஜராத்தில் பல்வேறு இடங்களில் பட்டினிப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு அனுமதி அளிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர்.

இதைதொடர்ந்து, அகமதாபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் 3 மணியளவில் காலவரையற்ற பட்டினி போராட்டத்தை ஹர்திக் பட்டேல் தொடங்கினார். பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பை சேர்ந்த பலர் அங்கு திரண்டுள்ளனர்.

இந்த பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்க வந்த தனது அமைப்பை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக செய்தியாளர்களிடம் பேசிய அர்திக் பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner