எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முயற்சிக்கும் கேரளத்திற்கு கூடுதல் உதவி அளிக்க வேண் டும் எனவும், கிடைக்கும் உதவிகளை தடுக்க கூடாது எனவும் கோரிக்கையை முன் வைத்துள்ள #Let Kerala Live    என்கிற ஹேஷ்டேக் பிரச்சாரம் சமூக வலைத்தளமான டுவிட் டரில் வைரலாகியுள்ளது.

மலையாளிகள் மட்டுமல் லாது கேரளத்துக்குக்கும், இந்திய நாட்டுக்கும் வெளியிலிருந்தும் ஏராளமானோர் கேரளத்துக்கான ஒருமைப் பாட்டுடன் இதில் இணைந்துள்ளனர். வரலாற்றில் மிகப்பெரிய துயரத்தை கேரளம் எதிர்கொள்ளும்போது நிவாரண உதவிகளை தடுக்கவும், வெறுப்பை விதைக்கவும் சங்பரிவார் நடவடிக்கைகளுக்கு எதிரான நேரடி விமர்சனமாக இந்த டுவிட்டுகள் உள்ளன. ஒன்றுபட்டு நின்ற கேரள மக்கள் குறித்து தவறான பிரச்சாரம் செய்து, பிளவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் முயற்சி மேற்கொண்டுள்ள சங்பரிவார் அமைப்புகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் வலுவான குரல் எழுந்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner