எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரை, ஆக.27 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்தவர் மணிகண்டன், 24. இவர் சுற்றுலா பயணியரை புகைப்படம் எடுத்து வழங்கும் பணியில், ஈடுபட்டு வந்தார். கடந்த, 24ஆம் தேதி, எக்கோ பாயின்ட்' பாறை மீது நின்று போட்டோ எடுத்த போது, பள்ளத்தில் தவறி விழுந்தார். தீயணைப்பு துறையினர், 75 அடி பள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். நினைவு திரும்பாததால், மதுரை வேலம் மாள் மருத்துவமனையில் சேர்த் தனர். தலையில் காயம் ஏற்பட் டதால், சிகிச்சை பலனளிக்காமல், மூளைச்சாவு அடைந்தார்.அவரது உடலுறுப்புகளை கொடையாக அளிக்க பெற்றோர் சம்மதித்தனர்.இதயம், நுரையீரல், சென்னை, 'போர்டிஸ் மலர்' மருத்துவ மனைக்கும்; ஒரு சிறுநீரகம், கல்லீரல், வேலம்மாள் மருத்துவ மனைக்கும்; கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் கொடையாக வழங்கினர்.'அவரது உடல் உறுப்புகள், ஏழு நோயாளி களுக்கு பொருத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner