எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கிருஷ்ணகிரி, ஆக.27- கிருஷ்ணகிரி நகராட்சியை ஒட்டியுள்ள கிராமம் கோவில் கொட்டாய். கிட்டம்பட்டி ஊராட்சி மன்றத்தில் உள்ள இந்த கிராமத் தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக் கிராமத்தின் அருகாமை யில் 85 ஏக்கர் நிலமும், நீர் பாசன வசதி யுடன் கொண்ட காமாட்சியம்மன் குட்டை யும் 13 குடும்பங்களுக்கு சொந்தமானதாகும்.

பட்டா மூலம் பாரம்பரியமாக பாத்தி யப்பட்ட காமாட்சியம்மன் குட்டையை பல ஆண்டுகாலமாக இந்த குடும்பங்களின் அனுபவத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த குட்டையில் மீன் வளர்க்க முடிவு செய்துள்ளதாகவும், இனி மேல் அக்குட் டையை பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் 13 குடும்பங்களும் பயன்படுத்தக் கூடாது. விவசாயம் செய்யக்கூடாது என்று பெரிய கவுண்டர், திம்மராயன், சின்னக் கவுண்டர் கோவிந்தன், மந்திரி கவுண்டர் மாது, கணக்குப் பிள்ளை லட்சுமணன், கோபி, தியாகராஜன் ஆகியோர் கட்டப் பஞ்சாயத்தில் முடிவு செய்ததாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்துள்ளனர்.

ஆனால், அந்த குட்டைக்கு பாரம்பரிய உரிமையுள்ள 13 குடும்பங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.இதனால், அந்த கட்டப் பஞ்சாயத்து கும்பல் ஆத்திரமடைந்தது. வழக்கு தொடர்ந்துள்ள காளியப்பன், சின்னதுரை, நாகராஜ், ராஜா, சங்கரநாராயணன், முரளி, கிருஷ்ணன் ஆகிய ஏழு பேரின் குடும்பங் களையும் இம் மாதம் 20 ஆம் தேதி முதல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இந்த குடும்பங்களுக்கு யாரும் எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாது, இவர் களுடன் யாரும் பேசக்கூடாது, எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என தண்டோரா போட்டு அறிவித்துள்ளனர். இதில் ராஜா மார்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ் ணகிரி தாலுகா செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன் ஆகியோர் காமாட்சி குட்டை பகுதிக்கு சென்றனர். அங்கு,பாதிக்கப்பட்ட தாலுகா செயலாளர் ராஜா உள்ளிட்ட ஏழு குடும்பத்தினரையும் சந்தித்தனர். பிறகு, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர்

பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த குட்டையை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்ததோடு மட்டுமின்றி ஊரை விட்டே ஒதுக்கி வைத்திருக்கும் கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்டப் பஞ்சாயத்து கும்பலின் தடையை நீக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க காமாட்சியம்மன் குட்டையை மீட்டு விவசாய நிலத்தை பாதுகாக்க வேண்டும். சிபிஎம் செயலாளர் ராஜா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner