எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.27  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவத் திட்டத்தில் தங்களை இணைப்பதற்கு வங்கிகளில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களை மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண் டும்.

இதில் பஞ்சாப் நேசனல் வங்கி, ஆந்திரா வங்கி, தமிழ் நாடு மாநில கூட்டுறவு வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், இம் மாதம் 29, 30 ஆகிய இரு நாட்களில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

மேலும் இந்தியன் வங்கி மூலம் ஓய்வூதியம் பெறு பவர்கள் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 3, 4, 5, 6, 7, 10, 11 ஆகிய நாட்களிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் செப்டம்பர் 12, 14, 17, 18, 19, 20, 24, 28 ஆகிய நாட்களிலும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இதன் பின்னர் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் அசல் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அட்டையுடன், தங்களது மார்பளவு 2 வண்ணப் புகைப்படம் ஆகியவற்றை செப் டம்பர் 28-ஆம் தேதிக்குள் மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேபோல குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது கணவர் அல்லது மனைவியுடனான 2 மார்பளவு புகைப் படம், வயது குறித்த ஆவணத்தின் 2 நகல்கள் ஆகிய வற்றையும் செப்டம்பர் 28-ஆம் தேதி மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது முதிர்வினால் நேரில் வர இயலாத ஓய்வூதிய தாரர்கள்  இணையதளத்திலோ, அல்லது தனி நபரை நேரில் அணுகியோ உரிய படிவங்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அணைகள் நிரம்பியுள்ளதால்

நீர்மின்சக்தி உற்பத்தி அதிகரிப்பு

சென்னை, ஆக.27 தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் நீர்மின்சக்தி (புனல்மின்சாரம்) உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது: தமிழகத் தின் மின்தேவை தற்போது சராசரியாக 14,000 மெகாவாட்டாக உள்ளது. இதில் பெரும்பாலும் அனல் மின்சாரத்தின் மூலமே தேவையை பூர்த்தி செய்து வருகின்றோம். தற்போது காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக காற்றாலை மின்சாரம் 4,000 மெகாவாட் அளவுக்கு உற்பத்தியாகியது. இந்நிலையில் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும் இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை நன்றாக பொழியும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த அணைகளின் நீர்மட்டம் குறையாது. இதனால் வரும் காலங்களில் முழு உற்பத்தித் திறனான 2,300 மெகாவாட் அளவுக்கு நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தற்போது அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் சேறு மற்றும் சகதி, மரக்கிளைகள், துணிகள் போன்றவை வருவதால், கவனமாக இருந்து நீர்மின்உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அணைக்கான நீர்வரத்துக் குறைந்து, தெளிந்த பிறகு, இந்த உற்பத்தி முழு அளவை எட்டும். இதனால் நடப் பாண்டில் 6,000 மில்லியன் யூனிட் அளவுக்கு நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைக்கவசம் அணியாமல் சென்ற

18 ஆயிரம் பேர் மீது வழக்கு

சென்னை, ஆக.27 மோட்டார் சைக்கிளின் பின்புறம் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததாக, கடந்த ஒன்பது நாள்களில் 9 ஆயிரம் பேர் மீது சென்னை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல்துறையின் போக்கு வரத்து பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறியது:

"கடந்த 9 நாள்களில் சென்னையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக 18,700 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் பின்புறம் அமர்ந்திருந்த 9,250 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது தனி கவனம் செலுத்தி வருகிறோம். வரும் நாள்களில் தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் அமர்பவர்கள் மீதான நடவடிக்கை இன்னும் தீவிரமாகும்" என்றார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner