எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

தெக்ரான், ஆக. 27- ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற் பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்து குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

கெர்மான்ஷா மற்றும் தசே காபாத் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 58 பேர் காயம் அடைந்தனர்.

5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கெர்மான் ஷாவில் இருந்து வடகிழக்கில் 88 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவாகி யுள்ளது.

முன்னதாக 2 தடவை நில அதிர்வு உணரப்பட்டது. அவை 3 ரிக்டர் ஆக பதிவாகி இருந்தது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது. ஆனால் அங்கு யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பாதிப்பு இல்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.

கெர்மான்ஷா மாகாணம் ஈராக் எல்லையில் மலைகள் சூழ்ந்த பகுதி. கடந்த ஆண்டு நவம்பரில் இங்கு 7.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப் போது கெர்மான்ஷா நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்க ளும் கடுமையாக பாதிக்கப்பட் டன. 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner