எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெஹ்ரான், ஆக. 27- ஈரான் நாட்டின் வடகிழக்கில் அமைந்து உள்ளது மஷாத் நகரம். இங்குள்ள மக்கள் வசிக்கும் குடி யிருப்பு ஒன்றின் அருகில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் அங்கிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பாய்லர் வெடித்து சிதறி யதில் அருகில் இருந்த மூன்றுக்கு மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.

தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியானவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உள்ளூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் தீ விபத்து

18 பேர் உயிரிழப்பு

பீஜிங், ஆக. 27- சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹார்பின் நகரில் ஹாட் ஸ்பிரிங்ஸ் உணவு விடுதி உள்ளது. இந்த உணவு விடுதியின் ஒரு தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற தளங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணி நடைபெற்றது.

இந்த தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட உணவு விடுதி யில் சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவுக்கு தீயில் கருகியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீஜிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்ததையடுத்து, கட்டடங்களில் பாதுகாப்பு விதிமீறல் களை கண்டுபிடிக்க 40 நாட்கள் தீவிர சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner