எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிக்மகளூர் ஆகஸ்ட் 27 மாட்டிறைச்சி சாப்பிடும் திரு விழா நடத்தப்பட்டதால் தான் கேரளாவில் வெள்ளம் பேர ழிவை ஏற்படுத்தியது என கர்நாடகா பாஜக சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் மத் திய அமைச்சருமான பசன்கவுடா படில் யட்னல் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்து மத உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். இதற்கு உதாரணம் தான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம். அந்த மாநிலத்தில் பலரும் மாட்டிறைச்சி உண்பதை ஆதரித்தனர். கடந்தாண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழா நடத்தப் பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இது தான் காரணம்.

இவர் ஏற்கெனவே என்னு டைய தொகுதி அலுவலகத்திற்கு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்க ளும், இஸ்லாமியர்களும் வர வேண்டாம், எனக்கு இந்துக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை மாட் டிறைச்சி சாப்பிடுபவர்கள் இந் துக்கள் அல்லர் என்றும் கூறினார். உண்மையான இந்துக்களுக்கு, நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறி பெரும் சர்ச்சைக்குள் ளானார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner