எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வேப்பூர், ஆக.27 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூரை சேர்ந்தவர் அப்பு(வயது 92). இவருடைய மகன் கண்ணன் (66). இவரது மனைவி சிறீஷா (56). இவர்களுக்கு காமாட்சி (19) என்கிற மகள் உள்ளார். இந்த நிலையில் கண்ணன் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்(40) என்பவர் ஓட்டி சென்றார்.

கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர், நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு திரும்பினர். அப் போது நேற்று அதிகாலை 3 மணிக்கு கார் கடலூர் மாவட் டம் வேப்பூர் அருகே அரிய நாச்சி என்கிற இடத்தில் திருச்சி- & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சுப்பிரமணிய னின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி உருக்குலைந்து போனது.

காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய அப்பு, கண்ணன், சிறீஷா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காமாட்சி, சுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு உடற் பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி, அந்த பகுதியில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பிய போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner