எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக.27- கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, வெறுமை யாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந் துள்ளனர்.

கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேத பகுதி களை ஆய்வுசெய்தபின், பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மாநிலத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட் டுள்ளது. மாநிலத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாலைகள், பாலங் கள் உள்ளிட்ட வசதிகளை மீண்டும் மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப்படுகிறது. எனவே, கேரளாவில் வாழும் மக்க ளும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முடிவு

புவனேசுவரம், ஆக. 27- நாடெங்கிலும் 22 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படவுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் திறன்வாய்ந்த நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் கூறினார்.

ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா சனிக் கிழமை நடைபெற்றது. இதில், ஜே.பி.நட்டா கலந்துகொண்டு பேசியதாவது:

சுகாதாரத் துறையின் அனைத்து நிலைகளிலும் திறன் வாய்ந்த நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதை கருத்தில் கொண்டு, மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சுகாதாரத்தில் பிராந்திய அளவில் நிலவும் சமநிலையற்ற தன்மையை போக்கும் வகையில் நாடெங்கிலும் 22 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன.

பிரமிடு வடிவம் போன்ற சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் மருத்துவக் கல்வியே முதலிடத்தில் இருக் கிறது. கல்வி மூலமாக தரமான மருத்துவர்களும், நிபுணர்களும் தேர்வு செய்யப்படுவது மட்டுமே, நாட்டில் எதிர்காலத்தில் மருத்துவ சேவைகளை தரமானதாக கொடுப்பதற்கு வழி வகையாக அமையும்.

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்துவது, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மய்யங் களை கூடுதலாக அமைப்பது, நிபுணர்களுக்கு நிலவும் பற் றாக்குறையை கருத்தில் கொண்டு பன்முகத் திறன் கொண்ட வர்களாக மருத்துவர்களை மாற்றுவது போன்ற நடவடிக்கை களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித் துள்ளார்.

கேரளாவில் 4 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் இழப்பீடு

திருவனந்தபுரம், ஆக. 27- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3.91 லட்சம் குடும்பத்தினருக்கு முதல்கட்ட உதவித் தொகையாக தலா ரூ.10,000 நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.242.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது. இருப் பினும், தற்போது வரையில் 8 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

தன்னார்வ அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளை, செல்பேசி செயலி மூலமாக படம் பிடிக்கவும், இந்த நடவடிக்கை முடி வடைந்த பின்னர் இழப்பீடுகளை வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

வெள்ளத்தில் தொலைந்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பொதுமக்கள் திரும்பப் பெறும் வகையில், துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்யும் வகையிலான தொழில்நுட்பத்தை அரசு தயாரித்து வருகிறது.

சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் சிறப்புத் திட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து செயல்படுத்தப்படும் என்று கேரள அரசு கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner