எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம் மாவட்ட திராவிடர் கழக முன்னாள் செயலாளர் கடவுள் இல்லை சிவக்குமார் (வயது 65) நேற்று (26.8.2018) மறைவுற்றார். இவரின் வாழ்விணையர் பெயர் ஜெயமணி. தமிழ்தென்றல் என்ற ஒரு மகனும் உள்ளார். இவருடைய இறுதி நிகழ்ச்சி இன்று (27.8.2018) நண்பகல் 12 மணியளவில் எவ்வித மூடச் சடங்குமின்றி உடல் எரியூட்டப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் கழகத்தின் சார்பில் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், பழனி.புள்ளையண்ணன், அமைப்புச் செயலாளர்கள் த.சண்முகம், ஊமை.செயராமன், மாநில மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்செல்வி, சேலம் மாவட் டக் கழகத் தலைவர் ஜவகர், மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், ஈரோடு மண்டல தலைவர் பிரகலாதன், தருமபுரி மண்டல தலைவர் சிவாஜி, கிருட்டிணகிரி மகளிரணி அமைப்பாளர் கண்மணி, சேலம் மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், தருமபுரி மண்டல செயலாளர் கோ.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தரராசன், தருமபுரி மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், சேலம் மாவட்ட அமைப்பாளர் பூபதி, மேட்டூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி, பெரியார் பற்றாளர் பி.எஸ்.சாமி, வைரம், வெற்றிசெல்வன் மற்றும் சேலம், மேட்டூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner