எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பரங்கிமலை மின்சார ரயில் விபத்து:

பொறியியல் கட்டுமானம், பராமரிப்பு தவறே காரணம்

விசாரணை அறிக்கையில் தகவல்

சென்னை, ஆக.28 சென்னை பரங்கிமலை ரயில் விபத்துக்கு பொறியியல் கட்டுமானம், பரா மரிப்பு தவறு உள்ளிட்ட வைதான் காரணம் என்று ரயில்வே பாது காப்பு ஆணையரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர் நோக்கி கடந்த மாதம் 24 - ஆம் தேதி காலை சென்ற மின்சார ரயிலில், படிக்கட்டில் தொங்கிய வாறு பயணம் செய்தவர்களில் 5 பேர் பரங்கிமலை ரயில் நிலை யத்தில் உள்ள சிமென்ட் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம டைந்தனர்.

இந்த விபத்து குறித்த தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் விசாரணை மேற்கொண்டார். அவரது விசாரணை நிறைவு பெற்ற நிலையில், அதன் முதல் கட்ட அறிக்கையை அவர் ரயில்வே வாரியத்தில் தாக்கல் செய்துள்ளார்.

26 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது:

பொறியியல் கட்டுமானம், பராமரிப்பு தவறு மற்றும் பயணி கள் பயணம் செய்த விதத்தில் ஏற்பட்ட தவறு ஆகியவையே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டு வகைப்படுத் தப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த பயணிகள், பக்கவாட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்த போது அவர்கஷ் மற்ற பயணி களையும் பிடித்து இழுத்து விழச் செய்திருக்கின்றனர். ரயில் பெட்டிக்கு வெளியே பயணிகள் தொங்கிக் கொண்டு பயணம் செய்த காரணத்தால், இரண்டு ரயில் பாதைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

கூட்ட நேரங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்களின் இருக்கைகள், மெட்ரோ ரயில்களில் இருப்பது போல் நீளவாக்கில் அமைக்க வேண்டும். ரயில் பாதைகளை கடப்பதாலும், ரயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதாலும் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பிரதான ரயில் நிலையங் களிலும், நடைபாதைகளிலும் பயணிகள் கூட்டத்தை சமாளிக் கவும், ரயில் பெட்டிகளில் பயணிகள் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களை அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். படிகளில் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்த வேண்டும்.

விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காய மடைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண் டும். ஏனெனில் அவர்களின் பாது காப்பு ரயில்வேயின் பொறுப்பு என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

கருகிய 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள்
திருவாரூர் விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூர், ஆக.28 காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஜூலை மாதம் 19-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து தண்ணீர் டெல்டா கடைமடை மாவட்டங் களான திருவாரூர், நாகை மாவட் டங்களில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வந்தடைந்தது.

இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு ஒருபோக சம்பா சாகுபடியை முழுமையாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் ஆரம்பக்கட்ட விவ சாய பணிகளை தொடங்கினர்.

திருவாரூர் அருகே கோமல், ராதா நஞ்சை, திருக்கார வாசல், பிச்சைப்பாக்கம் உள்ளிட்ட 6 கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் நேரடி தெளிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த வயல்களுக்கு தண்ணீர் வைக்க அரிச்சந்திரா நதியிலிருந்து கோமல் வாய்க் கால், பிச்சைப் பாக்கம் வாய்க் கால்கள் மூலம் தண்ணீர் வர வேண்டும்.

ஆனால் இந்த வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படாத காரணத்தினால் தண்ணீர் கடை மடைக்கு வந்து சேரவில்லை. இதனால் தெளிப்பு செய்து 25 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் முளைத்து கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேத னையுடன் தெரிவித்தனர்.

எனவே உடனடியாக வாய்க் கால்களை தூர்வாரி இந்த வாய்க் கால்களில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்வதோடு கருகும் சம்பா பயிர்களை காக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண் டும் எனக்கோரி திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் கோமல் என்ற இடத்தில் நேற்று (27.8.2018) காலை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழி யர்கள் மறியலில் ஈடுபட்ட விவ சாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வாய்க் கால்களை தூர்வாரி உடனடியாக தண்ணீர்விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner