எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.28 கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரண மாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும் தேவைப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள், களிம்புகள், பிற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பாது காப்பான மருத்துவ சிகிச்சை அளிப் பதற்கான கை உறைகள், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக குளோரின் மாத்தி ரைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருள்கள் கேரள மாநிலத்துக்கு தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் அனுப்பப் பட்டுள்ளன.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் கேரள எல்லையோரத்தில் உள்ள தமிழக மாவட் டங்களுக்கும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, எல்லை மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: கேரள மாநிலத்துக்கு இதுவரை ரூ.2.70 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட 30 மருத்துவக் குழுவினர் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தமிழகத்துக்கு தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க எல்லை மாவட்டங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங் களான திருச்சி, ஈரோடு ஆகியவற்றிலும் தொற்றுநோய்களைத் தடுக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன என்று

தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner