எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சென்னை, ஆக.28 சென்னையில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள 15 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்ட மிடப் பட்டிருப்பதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பசுமைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை உலகளவில் மேம் படுத்தும் நோக்கில் பல்வேறு நாடுகளில் பேட்டரியால், இயங் கும் மின்சாரப் பேருந்துகளை இங்கிலாந்தின் சி-40 நிறுவனம் அறிமுகப் படுத்தி வருகிறது.

இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள், சென்னையில் முகாமிட்டு போக்குவரத்து, நிதி, எரிசக்தி துறை உயரதிகாரிகளை கடந்த வாரம் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினா.

இது குறித்து அந்த அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

பயணிகள் நெரிசல் அதிக முள்ள இடங்களான பிராட்வே, தியாகராயர் நகர், ராஜீவ் காந்தி சாலை, புரசைவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, அம்பத்தூர் உள்பட மொத்தம் 15 முக்கிய வழித் தடங்களில் மின்சாரப் பேருந் துகளை இயக்கத் திட்ட மிடப்பட்டுள்ளது.

இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ள இங்கி லாந்தைச் சேந்த சி-40 நிறுவனம், பேருந்துகளின் மின்சார பேட்டரி களை சார்ஜ் செய்வதற்கான மய்யங்களை அமைப்பது குறித்து மின்சார வாரியத்துடன் ஆலோ சனை நடத்தி வருகிறது.

மேலும் இப்பேருந்துகளை இயக்குவது தொடர்பாக சி-40 நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளனர்.

அதில், கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவது, தேவையான இடங்களில் பேட் டரி சார்ஜ் மய்யங்களை அமைப் பது உள்ளிட்டவை குறித்து விரிவாக இடம் பெற்றுள்ளது.

மின்சாரப் பேருந்துகளை இயக்குவது தொடர்பான பணி கள் அனைத்தும் தொடக்க நிலையில்தான் உள்ளன என்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள்

பின்னால் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, ஆக.28 இருசக்கர வாகனப் பயணத்தின்போது வாகன ஓட்டியும், பின்னால் அமர்ந்து பயணிப்போரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தி யுள்ளது. இருவரும் தலைக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,476. இதில், தலைக்கவசம் அணியாமல் இறந்தோரின் எண்ணிக்கை 1,811 ஆகும்.

மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 129-ன்படி அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து பயணிப்போர் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ளபடி இருசக்கர வாகன ஓட்டிகள், பின் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்படிச் செல்லாதோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner