எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கான்பெரா, ஆக. 28- ஆஸ்திரேலி யாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வரு கின்றனர்.

லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள் கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

ஆனால் அவருக்கு எதிராக ஆட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உள்துறை அமைச் சர் பீட்டர் டட்டன் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவியை விட்டு விலகினார். இதனால், பிரதமர் பதவியில் நிலைக்க அவர் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற் பட்டது.

பிரதமர் பதவிக்கு தான் மீண்டும் போட்டியிடப் போவ தில்லை என மால்கோல்ம் டர்ன்புல் அறிவித்தார். வெளி யுறவு அமைச்சர் ஜுலி பிஷ்ப், பொருளாளர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர்.

அவர்களில் ஸ்காட் மாரிசன் கூடுதல் ஓட்டுகள் பெற்றார். இதைதொடர்ந்து, ஆஸ்திரே லியா மக்கள் கடந்த பத்தாண்டு களில் சந்தித்த ஆறாவது பிரதம ராக ஸ்காட் மாரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதுவரை ஸ்காட் மாரிசன் பிரதமராக பதவி வகிப்பார் என தெரி கிறது. தனது தலைமையிலான புதிய அமைச்சரவைக்கான பட் டியலை ஸ்காட் மாரிசன் தயா ரித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்காட் மாரி சனை எதிர்த்து போட்டியிட்ட ஜுலி பிஷப் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை விட்டு விலகி விட்டதாக தெரிவித்து உள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், நாடா ளுமன்றத்தில் இனி ஆளும் கட்சி வரிசையில் அமரப் போவதில்லை. பின்வரிசையில் அமர்ந்து மேற்கு ஆஸ்திரேலியா வுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.

இதனால், நாடாளுமன்றத் தில் ஒரு உறுப்பினரின் பெரும் பான்மையுடன் ஊசலாட்டம் போடும் ஆளும் லிபரல் கட்சி- தேசிய கூட்டணி பெரிய பின் னடைவை சந்திக்கலாம் என கருதப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner