எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மும்பை, ஆக. 28- பிரபல ஆங்கில வணிக இதழான “ஃபார்ச்சூன்’ புரட்சிகரமான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. 2018-ஆம் ஆண் டுக்கான இந்த சர்வதேச பட்டி யலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பெற்றி ருக்கி றது. சர்வதேச மருந்து நிறுவன மான மெர்க், பாங்க் ஆப் அமெரிக்கா போன்றவற் றைப் பின்னுக்குத் தள்ளி ஜியோ முத லிடத்தைப் பிடித்துள்ளது.

இணையதள தொடர்பு என் பது அடிப்படை மனித உரிமை என்று அய்.நா. 2016-ஆம் ஆண்டு அறிவித்தது. அதே ஆண்டு செயல்படத் தொடங்கிய ஜியோ, மிகக் குறைந்த கட்ட ணத்தில் 4ஜி தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பெருநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை விரை வாகப் பரவச் செய்தமைக்காக கவுரவப்படுத்தப்பட்டுள்ளது.

2020இல் 5ஜி தொழில்நுட்பம்

பயன்பாட்டுக்கு வரும்

புதுடில்லி, ஆக. 28- 5ஜி தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஏல நடவடிக் கைகள் இவ்வாண்டு இறுதியில் தொடங்கவுள்ளது. இந்நிலை யில், ஏற்கெனவே திட்டமிடப் பட்டதைவிட கூடுதல் அலைக் கற்றையை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைத்த 5ஜி வழிகாட்டுதல் குழு தெரிவித்திருக்கிறது.

தொலைத் தொடர்புத் துறை மட்டுமல்லாமல், டிஜிட்டல் பொருளாதாரம், கல்வி என பல்வேறு துறைகளில் பரவ லான தாக்கத்தையும், சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பம் என்ப தால், இதன் பயன்பாடு குறித்து புதிய கட்டுப்பாடுகள், விதி முறைகள் வகுக்கப்பட வேண் டும் என்று அந்தக் குழு பரிந் துரைத்துள்ளது. 2020-இல் 5ஜி தொழில்நுட்பம் மக்கள் பயன் பாட்டுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner