எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 27- தேசிய நல்லாசிரியர் விருது வழங்கு வதை செலவாக கருதாமல், அதை வெகுமதியாக கருத வேண்டும். எனவே தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண் ணிக்கையை 500 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து  தமிழக ஆசிரி யர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தேசிய நல்லாசிரியர் விருது கடந்த ஆண்டு வரை 374 பரிந் துரை விண்ணப்பங்கள் பெறப் பட்டு 374 பேருக்கும் விருது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு 374 விண்ணப்பங்கள் என்பது 145 என குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருந்து 6 பரிந்துரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

145 விண்ணப்பங்களில் வெறும் 45 பேருக்கு மட்டுமே மத்திய மனித  வள மேம்பாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு விருது வழங்கியுள்ளது. அதில் தமிழகத்துக்கு ஒரே ஒரு விருது கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் 22 பேருக்கு கிடைத்தது. இந்த ஆண்டு ஒரே ஒருவருக்கு மட்டுமே வழங்கியுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் தொடக்கப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களின் எண்ணிக்கை ஒரு லட் சத்து 15 ஆயிரத்து 568 பேர். உயர் தொடக்கப் பள்ளிகளில் 62 ஆயிரத்து 156 பேர் பணி யாற்றுகின்றனர்.

உயர்நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 509 பேர்.

இத்தனை ஆசிரியர்கள் பணியாற்றும் தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே விருது வழங்கியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை செல வாகப் பார்க்காமல் வெகுமதி யாக பார்க்க வேண்டும்.

மத்திய மனித வள மேம் பாட்டுத் துறை அமைச்சகத்தின் தன்னிச் சையான முடிவை தமிழ்நாடு ஆசிரியர் முன் னேற்ற சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

காவலர் பணிக்கான வயது வரம்பினை உயர்த்த நடவடிக்கை - புதுவை முதல்வர்

புதுச்சேரி, ஆக. 28- புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:

புதுவையில் காவலர்கள் தேர்வு 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள நிறைய இளைஞர்கள் தயாராக உள்ளனர். இதற்கான வயது வரம்பினை 22-லிருந்து 24 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக காவல்துறை டி.ஜி.பி.யை அழைத்துப் பேசினேன். அதைத் தொடர்ந்து வயது வரம்பினை 24 ஆக உயர்த்தி நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு கோப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பாலசேவிகா, ஆரம் பப்பள்ளி ஆசிரியர், கணினி ஆசிரியர், பயிற்சிபெற்ற பட்ட தாரி ஆசிரியர், மொழி ஆசிரி யர், விரிவுரையாளர்கள் என 392 பேரை தேர்வு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற் கான தேர்வும் விரைவில் நடை பெறும்.

இவ்வாறு முதல்அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner