எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 28- சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதந் தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழ் வளர்ச் சித்துறை வெளியிட்ட செய்தி:

தமிழக அரசின் உலகத் தமி ழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு, திருமந்திரமும் வாழ் வியலும், தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரு கின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற் றும் தமிழ் முதுகலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. நிக ழாண்டு முதல் தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு அரசால் கல்வி உதவித்தொகை யாக மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். விண் ணப்பங்களை, சென்னை உல கத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது இணைய முகவரியிலோ பதிவிறக்கம் செய்து பெறலாம். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை கடந்த ஆக.15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது, அது செப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தக வல் பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மய்யத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை- 600113 என்ற முகவரியில் அல் லது 044-22542992 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம்.

ராணுவ வீரர்களுக்கு உயரிய சிகிச்சை

புதுடில்லி, ஆக. 28- நாட்டின் மிக உயர்ந்த பகுதியான சியாச்சி னில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர் களுக்கு சிறப்பான உயரிய சிகிச்சை அளிக்க இஸ்ரோவுடன் மத்திய பாதுகாப்புத் துறை ஒப் பந்தம் மேற்கொள்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யமான இஸ்ரோவின் மேம் பாடு மற்றும் கல்வி தொலைத் தொடர்புப் பிரிவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்திய ராணுவ, கடற் படை, விமானப் படை வீரர்க ளுக்கு சிகிச்சை அளிக்க இஸ்ரோ ஏற்கெனவே அமைத்திருக்கும் 20 மருத்துவ அமைப்புகளையும் தாண்டி, தற்போது புதிதாக 53 மருத்துவ அமைப்புகள் உரு வாக்கப்பட உள்ளன.

உலகின் மிக உயரமான எல்லைப் பகுதியாக விளங்கும் சியாச்சினில் வெறும் ஒரு மருத்துவ அமைப்பு மட்டும் உருவாக்கப்படாமல், வீரர் களுக்கு ஆலோசனை வழங்கும் 4 மெடிசின் நோட்ஸ் உருவாக்கி அதன் மூலம் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வழிவகைக் காணப்பட்டுள்ளது.

இந்த எல்லைப் பகுதியில் மிக மோசமான எதிரி வானி லைதான். இப்பகுதி ஆண்டுக்கு ஒரு சில மாதங்கள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து முற் றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விடும். அதுபோன்ற சமயத்தில் செயற்கைக் கோள் மூலம் தக வல் பரிமாற்றங்கள் செய்யும் வசதி கொண்ட டெலிமெடிசின் நோட்ஸ் மூலம் உயிர் காக்கும் மருந்துகள் வரவழைக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner