எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 28- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நகை மதிப்பிடுதல், லாஜிஸ்டிக் மேலாண்மை தொடர்பான இலவசப் பயிற்சி, அம்பத்தூரில் வரும் 30-ஆம் தேதி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவை இணைந்து, படித்த வேலையில்லாத இளைஞர்கள், இளம் பெண்களுக்கு உடனடி வேலை வாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சிகளை அளிக்கிறது.

அந்த வகையில், முழு நேர ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் ஜி.எஸ்.டி.யுடன் கூடிய நகை மதிப்பிடுதல், சப்ளை மேலாண்மை, லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை, ஸ்டோர்ஸ் மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை மற்றும் பொருள்கள் மேலாண்மை ஆகிய பயிற்சிகள் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகள், அம்பத்தூர் மகாகவி பாரதியார் நகர், சரஸ்வதி வித்யாலயா பள்ளி பயிற்சி மய்யத் தில் நடைபெறவுள்ளது.

பயிற்சிகளை திறம்பட முடித்தவர்களுக்கு, தமிழக அர சின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு வந்து செல்வதற் கான போக்குவரத்து செலவினை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. இக் குறுகியகால இலவசப் பயிற்சிகளில் 12-ஆம் வகுப்பு, இளங்கலை பட்டம் மற்றும் மேற்படிப்பு படித்தவர் கள் பங்கேற்று பயன் பெறலாம். பயிற்சி தொடர்பான விவரங்களை பெற 98690 41169, 72999 55904 ஆகிய செல்பேசி எண்களிலும், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள் ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு

சென்னை, ஆக. 28- அரசு கலை -அறிவியல் கல்லூரி பேராசிரியர் களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இடமாறுதல் கலந்தாய்வு, சென்னை ராணி மேரி கல்லூரியில் செப்டம்பர் 10, 11,12 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதற்கு தகுதியுள்ள அனைத்து ஆசிரியர் களும் ஆகஸ்ட் 30 -ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 -ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்படும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner