எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலபுராகி, ஆக. 28- ஆர்.எஸ்.எஸ். எனும்  ராஷ்டிரிய சுயம் சேவக் மற்றும் அதன் துணை அமைப்புகளாக உள்ள சங் பரி வார் அமைப்புகளை அரசு தடைசெய்ய வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கரின் கொள்ளுப் பெயரன் ராஜரத்னா அம் பேத்கர் கூறியுள்ளார்.

கவுரி லங்கேஷ், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் ஆகியோர் படுகொலை களுக்கு பொறுப்பான ஆர்.எஸ்.எஸ்-. தலைமையிலான சனாதன்சன்ஸ்தா உள் ளிட்ட வலது சாரி அமைப்புகளான சங் பரிவார் அமைப் புகள் தடைசெய்யப்பட வேண்டும் என்று ராஜரத்னா அம்பேத்கர் வலியுறுத்திக் கூறியுள்ளார். டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் அண்மையில் அரசமைப்புச் சட்டத்தின் நகல் கொளுத் தப்பட்டதைக் கண்டித்து, கருநாடக மாநிலம் கலபுர்கி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜரத்னா அம்பேத்கர்  கலந்து கொண்டார்.

ராஜரத்னா அம்பேத்கர்

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம் பேத்கரின் கொள்ளுப் பெயரன் ராஜ ரத்னா அம்பேத்கர் கருநாடக மாநிலம் கலபுராகி நகரில் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது விட்டல்தத்தாமணி உள்ளிட்டவர்கள் உடனிருந்தார்கள்.

செய்தியாளர்களிடம் ராஜரத்னா அம்பேத்கர் கூறியதாவது:

ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் மற்றும் பிற பகுத்தறிவாளர்களின் கொலை வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள அனைவருமே சனாதன் சன்ஸ்தா போன்ற வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். கொலைகளில் நேரடியாக தொடர்பு டைய அமைப்புகளை மட்டும் தடை செய்தால் போதாது. அந்த அமைப்புகள் யாவும் ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்புகளாகவே இருக்கின்றன. பதிவு செய்யப்படாத அமைப்புகளா கவும் இருக்கின்றன. ஆகவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், அதன் சார்பு அமைப்புகளையும் தடை செய்ய வேண் டும் என்று அரசிடம் நாங்கள் கோருகி றோம். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இயற் றிய அரசமைப்புச்சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை. மனுஸ்மிருதி அடிப் படையிலான அரசமைப்புச்சட்டத்தையே ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வருகிறது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச்சட்டம் விளிம்புநிலை மக்களுக்கான பாதுகாவல் அரணாக இருந்து வருவதால், அரசமைப்புச் சட் டத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. பாஜக தலைவர்கள் பலரும் அரச மைப்புச்சட்டத்துக்கு விரோதமாகவே பேசி வருகிறார்கள். இதே அரசமைப்புச் சட்டத்திற்கு நன்றி தெரிவித்தே நரேந் திரமோடியும் பிரதமரானார்.  ஆனால், எப்போதுமே அதுகுறித்து அவர் வாய் திறப்பதில்லை. நாடாளுமன்றத்துக்கு வெளியே அரசமைப்புச்சட்டத்தின் நகல் எரிக்கப்பட்ட பிறகும்கூட, அது குறித்து அவர் வாய்திறக்கவில்லை.

அண்மையில் கேரளாவில் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக அய்க்கிய அரபு எமிரேட் நாடு நிதி உதவி வழங்க முன்வந்தநிலையில், மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதுகுறித்து ராஜரத்னா அம்பேத்கர் கூறுகையில், வெளிநாட்டிலிருந்து பெருமளவி லான நிதியை அவர் கட்சிக்காக பெறும் போது  பிரதமருக்கு எந்த ஒரு பிரச்சி னையும் எழுவதில்லை. அதேநேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்கு நிவாரணத்துக்காகவும், மறுவாழ் வுக்காகவும் என்றால், அவருக்கு பிரச் சினை ஏற்பட்டுவிடுமா? இந்த நாட் டின் மக்கள் குறித்த எண்ணம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயுள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜாதியும், ஜாதி அடிப்படையிலான தீண்டாமையும் இருக்கும்வரை ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்று ராஜரத்னா அம்பேத்கர் கூறினார்.

அவர் கூறியதாவது:

நாங்களும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. ஜாதியே இல்லாத சமூகம் இருக்கவேண்டும் என்று நாங் கள் விரும்புகிறோம். ஆகவே, ஜாதி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு இருக்கவேண்டுமா என்கிற கேள்வியே எழவில்லை. ஒடிசாவில் ஜகன்னாத் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம் நாத்கோவிந்த்துக்கு எதிராகக்கூட பாகு பாடு காட்டப்பட்டது. அது அவருடைய ஜாதியால் அன்றி வேறொன்றுமில்லை.  ஜாதிரீதியிலான பாகுபாடுகள் இருப்பது உண்மை. ஜாதி அடிப்படையில் பாகுபாடுகள் எவ்வளவு காலத்துக்கு இருக்குமோ அவ்வளவு காலத்துக்கும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இருக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஜாதியும், ஜாதி அடிப்படையிலான பாகுபாடுக ளும் இருக்கவேண்டும் என்று நினைக் கிறார். ஆனால், ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டும் இருக் கக்கூடாது என்று நினைக்கிறார்.

குழந்தைகள் அனைவருக்கும் சமூக, பொருளாதார நிலைகளைக் கடந்து, சமமான கல்வி முறை இருக்கவேண்டும். ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

ஒரே இந்தியா, ஒரே (சமமான) கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக் கப்பட வேண்டும் என்றால், ஒரே நாடு, ஒரேநேரத்தில் தேர்தல் என்பதில்லை. குடியரசுத் தலைவர் இல்லத்துப் பிள் ளைகள் அல்லது முதலமைச்சர் இல் லத்து பிள்ளைகளும், சமூகத்தில் அடித் தட்டு மக்களாக உள்ள சாதாரண குடி மக்களின் பிள்ளைகளும் ஒரே இடத்தில் சமமாக அமர்ந்து சமமமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று விரும் புகிறோம்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் அம் பேத்கரின் கொள்ளு பெயரன் ராஜரத்னா அம்பேத்கர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner