எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருச்சி, ஆக.29  முக்கொம்பு மேலணையில் உடைந்த பகுதி யில் தற்காலிகத் தடுப்பு அமைக் கும் பணியில் 800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

திருச்சி முக்கொம்பு மேல ணையில் கடந்த 22 ஆம் தேதி இரவு 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து அங்கு தற்காலிகத் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை செவ்வாய்க் கிழமை பார்வையிட்ட ஆட்சியர் கு.ராசாமணி, செய்தியாளர்களிடம் கூறியது: சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகள், பெரிய கருங்கற்கள் அடுக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது. இந்தப் பணியில், இரவு பகலாக 800க்கும் மேற்பட்ட பணியா ளர்கள் சுழற்சி அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வாகனங்கள் மூலம் சீரமைப்புப் பணிக்கான மூலப்பொருள்கள் கொண்டுவரப்படுகின்றன. இரண்டு பெரிய மிதவை இயந்திரங்கள், 8 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளன.

இன்னும் நான்கு நாள்களில் அணை உடைப்பு வழியாக வெளியேறும் தண்ணீர் முழு வதும் தடுக்கப்பட்டுவிடும். இதன் பிறகு முறைப்படி தண்ணீர் வெளி யேறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

20-க்கும் மேற்பட்ட பொதுப் பணித்துறை அலுவலர்கள் தலைமையில், சீரமைப்பு மற்றும் காவிரியில் தண்ணீர் திருப்பி விடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இது வரை, 60 சதவீத பணிகள் முடிந் துள்ளன. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 4 மீட்டர் ஆழத்துக்கு தண்ணீர் வேகமாக வெளியேறிக் கொண்டுள்ளது.

எனவே, கருங்கற்களை அடுக்கியும், மணல் மூட்டை களை 5 அடி உயரத்துக்கு அடுக் கியும் தண்ணீரின் வேகம் கட்டுப் படுத்தப்பட்டு வருகிறது. செப் டம்பர் முதல் வாரத்துக்குள் இப்பணியை முடித்து விடலாம் என்று நம்புகிறோம். அணையில் நீர் தேங்கியுள்ள பகுதியில் சவுக்கு மரங்களை நிறுத்தி, மணல் மூட்டைகள் அடுக்கப் பட்டு, அணைக்கும், மணல் மூட்டை தடுப்புக்கும் இடையே கான்கிரீட் சுவர் அமைக்கப்படும். இதன் மூலம் உடைப்பு வழியாக தண்ணீர் வெளியேறுவது முழு வதும் தடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

தடுப்புகள் அமைக்கும் பணி யில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் களுக்கு அணையில் உள்ள ஆய்வு மாளிகை பகுதியில் நிரந்தர மருத்துவ முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படு வோரை கொண்டு செல்ல வாக னங்களும் தயார்நிலையில் வைக் கப்பட்டுள்ளன என்றார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner