எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெர்லின், ஆக. 29- உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா மற் றும் ஈராக்கில் இருந்து ஏராளமானோர் வெளியேறி அய்ரோப் பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் 13 லட்சம் பேர் அகதிகளாக குடியேறினர். தொடர்ந்து பலர் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அகதிகள் வருகைக்கும், இங்கு அவர்கள் தங்குவதற்கும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு ஜெர்மனியின் செமின்ட்ஷ் நகரில் நடந்த மோதலில் ஜெர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டார். இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதைதொடர்ந்து அகதிகளுக்கு எதிராக செமின்ட்ஷ் நகரில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது வெளிநாட்டினர் விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டத்தை அடக்க காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அப்போது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கல்வீசி தாக்கினார்கள். அதேசமயம் மற் றொரு குழுவினர் எதிர்போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத் தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாட் டில்கள் மற்றும் பட்டாசுகளை வெடிக்கச் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவங்களில் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பிரதமர் ஏஞ்சலா மெர்கெ லின், செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சிபெர்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலையில் தீ!

பார்வையாளர்கள் வெளியேற்றம்

நியூயார்க், ஆக. 29- அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்பர் தீவில் சுதந்திர தேவி சிலை உள்ளது. கையில் தீபத்தை ஏந்திய நிலையில் இருக்கும் அந்த சிலை 151 அடி உயரம் கொண்டது.

தீவின் நடுவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த சிலையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு திடீரென தீவிபத்து ஏற் பட்டது. சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு பயன்படுத் தப்பட்ட 3 புரோடேன் எரிவாயு சிலிண்டர்களில் இருந்து வெளியான தீ மளமளவென பரவியது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பார்வையாளர்கள் அலறி யடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்து காரணமாக சுதந்திர தேவி சிலையை காணவந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner