எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஆக. 29 இந்தியாவில் கடந்த 10மாத காலத்தில் சுமார் 60 லட் சம் பேர், வேலையிலிருந்து வெளியேறி இருப்பது, மத்தியஅரசே வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் சுமார் 46 லட்சம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் அமைந்துள் ளது.ஏற்கெனவே பார்த்தவேலையைக் கைவிட்டவர்கள் குறித்த தகவல்களை, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதற்போது அரசு வெளியிட்டுள்ளது. இதில், அமைப்பு சார்ந்த வேலைகளிலிருந்து விலகிய நபர்களின் எண்ணிக்கையை, தொழிலாளர் சேமநல நிதிய  அமைப்பு அளித்த தரவுகள் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

அதில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பில் 1 கோடியே 7 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்றால், இதே காலத்தில் 60 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித் துள்ளது.

அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாக்கப்படும் வேலைகள் மற்றும் இழக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கை குறித்து அளவிடுவதற்கு, தொழிலாளர் சேமநல நிதியத்தின் தரவுகளைத் தான் அண்மைக்காலமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. எனினும், தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பை விட்டு ஏன் இவ்வளவுஊழியர்கள் வெளியேறுகின்றனர் என்பது குறித்த தகவல்களை அரசு தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்

38 பட்டப் படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி

சென்னை, ஆக.29 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் 38 படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 5 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என அதன் துணைவேந்தர் மு.பாஸ்கரன் தெரிவித்தார்.

மீதமுள்ள பட்டப் படிப்புகளுக்கும் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பேட்டி: திறந்தநிலைப் பல்கலைக்கழகம் யுஜிசி-யின் 12பி தகுதி பெற்று இயங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தின் சார்பில் இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு, பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என மொத்தம் 128 படிப்புகள் உரிய அனுமதி யுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் முதுநிலை, இளநிலை பட்டப் படிப்புகளைப் பொருத்த வரை இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அடுத்த படியாக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 38 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கான அங்கீகாரத்தை யுஜிசி வழங்கியுள்ளது.

பி.எட். உள்ளிட்ட ஒரு சில படிப்புகளுக்கான அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் அனைத்தும் உரிய அனுமதியும், அங்கீகாரமும் பெற்ற படிப்புகள் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner