எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஆக.29  கேரளத்தில் பெய்த மழை வெள்ளத்தால் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டிருந்த நெல், வாழை மற்றும் நறுமணப்பயிர்கள் சேதம டைந்ததாக மத்திய வேளாண் துறை செயலாளர் ஷோபனா கே. பட்நாயக் திங்கள்கிழமை தெரிவித்தார்.

மேலும் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விரி வான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் மாநில அரசு சமர்ப்பித்துள்ளது.

இதுவரை 45 ஆயிரம் ஹெக் டேர் விளை நிலங்கள், பண்ணை நிலங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு அறிக்கை அனுப்பி யுள்ள நிலையில் மத்திய அரசு நடத்திய ஆய்விலும் அதே அளவிற்கு சேதம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், கேரளத்தில் வீடுகள் மற்றும் பல் வேறு இதர உள் கட்டமைப்புகளே பெருமளவில் சேதமடைந் துள்ளது.

தென்மேற்கு பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்ட சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நெல் வயலும், வாழை சாகுபடியும் கடும் பாதிப்படைந்துள்ளன. நறு மணப்பயிர்களில் ஏலக்காய் போன்றவை 2 ஆயிரம் ஹெக் டேரிலும் பாதித்துள்ளது.

கேரளத்தில் இந்த ஆண்டு 57ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டதாக கணக் கெடுப்பு புள்ளிவிவரங்கள் தெரி விக்கின்றன. கடந்த ஆண்டு இதே பருவத்தில் கேரளத்தில் 62 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

மலிவுவிலை மருந்து உறையிலும்

பாஜக மலிவான அரசியல்!

புதுடில்லி, ஆக. 29 -மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை யின் சார்பில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘பிர தான் மந்திரி ஜனவுஷதி யோஜ்னா’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.

ஜெனரிக் மருந்துகளை மலிவு விலையில் பொதுமக் களுக்காக விநியோகிக்கும் இத் திட்டத்தின் பெயரானது, பின் னர் ‘பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பாரி யோஜ்னா’ என மாற்றப்பட்டது.

இந்நிலையில், மத்திய மோடி அரசானது,இது மலிவு விலை மருந்து உறைகளில், பாஜபா (பாஜக) எனத் தங்கள் கட்சியின் பெயரை பொறித்து மாட்டிக் கொண்டுள்ளது.

மருந்து உறையில் ‘பிரதான் மந்திரி’ என்பதை இந்தியில் சிறிதாக அச்சிட்டு விட்டு, மீத முள்ள பெயரான ‘பாரதிய ஜனவு ஷதி பாரியோஜ்னா’ என்பதன் முதல் மூன்றுஇந்தி எழுத்துக்கள் (‘பாஜபா’) சற்று பெரிதாக - குறிப்பாக காவி நிறத்தில் அச்சிட்டுள்ளது.

இதற்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. “மருந்து உறை களில் இதுபோல் பலவருடங் களாக, தவறான பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதை எங்கள் உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் கண்டறிந்தார்.

இந்த மருந்து உறைகள், பாஜக-வின் நிதியில்தான் மலிவு விலை மருந்துகள் மக்களுக்குக் கிடைப்பதுபோன்ற தோற் றத்தை உருவாக்குகின்றன. இதை உட னடியாக அரசு திரும்பப்பெற வில்லை எனில், நீதிமன்றத்தை அணுக வேண்டி யிருக்கும்” என்று அகில இந்திய மருந்து நடவடிக்கை அமைப்பின் இணை அமைப்பாளரான எஸ். சிறீநிவாசன் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner