எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகத் தலைவர் அம்மா விளக்கம்

21.9.1975 அன்று சென்னை அண்ணா சாலையில் திராவிடர் கழகத்தின் சார்பாக திறக்கப்பட்ட தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களது சிலை திறப்பு விழாவிற்குத் தலைமை ஏற்ற கழகத் தலைவர் அம்மா அவர்கள் கலைஞர் சிலையைத் திறக்க அடிகளாரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்கினார்கள்:

கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறக்க தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அழைத்தது பற்றி கூட சிலர் பிரச்சினையை எழுப்புகிறார்கள். அப்படி பிரச்சினையை எழுப்புபவர்கள் சரியாகச் சிந்திக் காதவர்கள் என்றுதான் அர்த்தம்!

இன உணர்ச்சியே!

தந்தை பெரியார் அவர்கள் எந்தப் பிரச்சினை யாக இருந்தாலும் அதில் இன உணர்ச்சிக் கண் ணோட்டம் தான் முக்கியம் என்று கருதி அதன் படியேசெயல்படக்கூடியவர்கள். அவர்கள் மதவாதி யாக இருந்தாலும், வேறு பல கருத்துக்களில் மாறு பாடாக இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது அவர்களிடம் ''தமிழன்'' என்கின்ற இன உணர்ச்சி இருக்கிறதா என்பதைத்தான் முக்கிய மாகப் பார்ப்பார்கள்.

ஞானியார் அடிகள்

உதாரணமாக 1925ஆம் ஆண்டிலே அய்யா அவர்கள் "குடி அரசு" ஏட்டைத் துவக்கிய நேரத் திலே கூட திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடி களைத் தான் அழைத்துத் துவக்கவிழா நடத் தினார்கள். நம்முடைய இனத்திலே பிறந்த ஒருவர் எந்த இடத்திலே இருந்தாலும்  அவர்களைப் பெருமைப்படுத்தவேண்டும்-பெருமையாகநடத்த வேண்டும் என்று கருதுபவர்கள் தந்தை பெரியார். அந்த அடிப்படையில் தான் ஞானியார் அடிகளை அழைத்ததோடு மட்டுமல்லாமல் தானே சாஷ் டாங்கமாக வீழ்ந்து அவரை வணங்கினார். சங்கராச்சாரி வந்தால் பார்ப்பனர்கள் எல்லாம் அவரை எப்படி நடத்துகிறார்கள், எவ்வளவு மரியாதை செய்கிறார்கள்? அந்த உணர்ச்சி நமக்கு இருக்க வேண்டாமா என்று கூறுவார்கள்.

காலில் வீழ்ந்து வணங்கினார்

தந்தை பெரியார் அவர்கள் ஞானியார் அடி களிடத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்தது தான் தாமதம்; அங்கு கூடியிருந்த அத்தனைப் பேருமே அவரை நமஸ்கரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வரலாறுகனை எல்லாம் புரியாதவர்கள் தான், இன்றைய தினம் அடிகளாரை அழைத்தது பற்றி பிரச்சினை எழுப்பு கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

தவத்திரு அடிகளார்

நமது தவத்திரு குன்றக்குடி அடிகளார் உருவத்தால் மாறுபட்டிருந்தாலும், ஒரு சில கருத்துக்களால்   நம்மிடமிருந்து வேறு பட்டிருந்தாலும் இன உணர்ச்சி என்று வருகின்றபோது நாம் எவருக்கும் சளைத்தவர்களல்ல! அவர்களிடம் குடிகொண்டிருந்த இன உணர்ச்சியை மதித்துத்தான்,  பாராட்டிதான் தந்தை பெரியார்அவர்கள், அடிகளாரை மதித்து வந்தார்கள். அய்யா அவர்களே முன்னின்று நடத்தியிருக்கக்கூடிய பெரிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நமது அடிகளார் அவர்களை அழைத்திருக்கிறார்கள் என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இன உணர்ச்சி திருவிழா

இன்றைய தினம் கலைஞருக்கு சிலை எடுப்பது என்பது கலைஞருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல - அது அவருக்குத் தேவையற்றதும்கூட! இன்று நடைபெறுவது இன உணர்ச்சித்திருவிழா. இன உணர்வின் சின்னமாகத்தான் இன்றைய தினம் கலைஞர் அவர்களுடைய சிலையை தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று திராவிடர் கழகம் எடுத்து இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கலைஞர் அவர் களுடைய சிலையை யாரைக்கொண்டு திறக்கலாம் என்று எண்ணியபொழுது, நமது தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் எங்கள் நினைவிற்கு வந்தார்கள். ஒரு இன உணர்ச்சி விழாவிற்கு ஒரு இன உணர்வு கொண்ட தமிழரைத்தானே அழைக்க முடியும்? மேலும் வேறுயாரையும் நாங்கள் அழைக்காததற்குக் காரணம், அடிகளார் அவர்களைத் தவிர சிறந்த ஒருவர் எங்களுக்குக் கிடைக்காததேயாகும்.

இவ்வாறு கழகத் தலைவர் அம்மா அவர்கள் டாக்டர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner