எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேகாக்கொல்லை, ஆக. 29 அண்ணா பல்கலைக்கழக தோட்டக்கலை இறுதி யாண்டு 16 மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெரும் திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் வேகாக்கொல்லை கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்றனர்.

15.8.2018 அன்று காலை 9 மணியளவில் வேகாக் கொல்லை நடுநிலைப் பள்ளி மாணவர்களைக் கொண்டு சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து கொள் ளுதல், மரம் வளர்த்தல், நெகிழி (பிளாஸ்டிக்) பயன் பாட்டை தடை செய்யுதல், மழை நீர் சேகரிப்பு, கழி வறை பயன்பாடு போன்ற வற்றைவலியுறுத்தி வேகாக் கொல்லை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய பெருமக்கள், அண் ணாமலைப் பல்கலைக் கழகம் தோட்டக்கலை உதவி பேராசிரியர் முனை வர் சி.முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிற்சி பெறும் மாணவிகள் எஸ்.ஆஷா, எஸ்.அபிநயா, வி.இலக்கியா, எம். இர்ஃபானா பர்வீன், எல். கமலி, வி.கவிபாரதி, கே. கலைவாணி, ஆர்.கிருஷ்ண வேனி, ஏ.லிவேதனா, இ. நந்தினி, பி.பொற்செல்வி, எம்.ரமணி, டி.ரம்யா, ஆர். சிலம்பரசி, பி.சிவப்பிரியா, இ.விஜயலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்து நடத்தினர்.

நிறைவு விழா

23.8.2018 இன்று மாலை 5 மணியளவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வேகாக் கொல்லை திராவிடர் கழக கடலூர் மாவட்ட செய லாளர் நா.தாமோதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் தென்.சிவக் குமார் முன்னிலை வைத் தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த பால்கி அவர்கள் கலந்து கொண்டு பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் உரிமைக்கு பெரியாரின் தொண்டுகள் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராள மான விவசாயிகள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான தங்குமிடம் உணவு ஏற்பாடு போன்றவற்றை வேகாக் கொல்லை திராவிடர் கழக தோழர்கள் நா.பஞ்சமூர்த்தி, நா.தட்சிணாமூர்த்தி, நா. இளையபெருமாள், ப.கதிர்வேல், இரா.வேணு கோபால், இரா.மாணிக்க வேல் உள்பட பலர் செய்தனர். மாணவிகள் பிரிந்து செல்ல மனமில்லாமல் கண்ணீரோடு விடைபெற்று சென்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner