எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.30 நாடு முழுவதும் உள்ள  சுங்கச்சாவடி களில் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுர்களின் (விஅய்பி) வாகனங்கள் தடையின்றிச் செல்லும் வகையில் தனி வழித்தடங்களை அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்துவது தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதி மன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளி தரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் (விஅய்பி) வாக னங்கள் செல்ல சுங்கச் சாவடி களில் தற்போது தனி வழிகள் எதுவும் இல்லை. இதன் காரண மாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வாகனங்கள்கூட நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்கப்படு கின்றன.

சுங்கச்சாவடிகளில் காத்து நிற்கும் நீதிபதிகளின் வாகனங் களில் நீதிபதிகளுக்கான அடை யாளச் சின்னங்கள் இருந்தும், வாகனத்தை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டிய பிறகும் கூட சில இடங்களில் தேவையற்ற பிரச்சினையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. எனவே, நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் பணியில் உள்ள நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் (விஅய்பி) வாக னங்கள் தடையின்றிச் செல்லும் வகையில் தனி வழித்தடங்களை அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், அனைத்து சுங்கச் சாவடிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவ மதிப்பு நடவடிக்கை எடுக்க நேரி டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

செப்.1 இல் தபால் துறை சார்பில்

பேமென்ட்ஸ் வங்கி தொடக்கம்

சென்னை, ஆக.30 தபால்துறை சார்பில், நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்கும் திட்டம் (பேமென்ட்ஸ் வங்கி) வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

முதல்கட்டமாக தமிழகத்தில் 37 கிளைகள் உள்பட நாடு முழுவதும் 648 கிளைகளில் இந்த வங்கிச் சேவை அளிக்கப்படவுள்ளது.

இந்திய அஞ்சல் துறை, ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாஃபோன், ஆதித்யா பிர்லா உள்பட 11 நிறுவனங்களுக்கு பேமென்ட்ஸ் வங்கி தொடங்க 2014-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன்படி, இந்திய அஞ்சல்துறை சார்பில், 650 இடங்களில் பேமென்ட்ஸ் வங்கிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக ராஞ்சி, ராய்ப்பூர் ஆகிய இடங்களில் அஞ்சல் துறை சார்பில் சோதனை முயற்சியாக பேமென்ட்ஸ் வங்கிகள் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 648 இடங்களில் பேமென்ட்ஸ் வங்கி செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கப்படவுள்ளது. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 37 கிளைகளில் பேமென்ட்ஸ் வங்கிச் சேவை அளிக்கப்பட வுள்ளது.

இக்கிளைகளுடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்கள் வங்கிச் சேவை அளிப்பதற்காக இணைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து அஞ்சல் துறை தமிழக வட்டத் தலைவர் எம். சம்பத் கூறியதாவது:

தமிழகத்தைப் பொருத்தவரை, 37 கிளைகளில் பேமென்ட்ஸ் வங்கிச் சேவை தொடங்கப்படுகின்றன. இந்த கிளைகளுடன் 185 அஞ்சல் நிலையங்கள் இணைக்கப்பட்டு வங்கிச் சேவை அளிக்கப்படும். தற்போது தமிழகத்தில் 11, 745 அஞ்சல் நிலையங்கள் உள்ளன.

அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பேமென்ட்ஸ் வங்கிச் சேவைகளை வரும் டிசம்பருக்குள் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் பேமென்ட்ஸ் வங்கியில் ஒரு லட்சம் கணக்குகளை ஒரே நாளில் தொடங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner