எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஆக. 30- அய்.நா. சபையின் உதவி பொதுச் செய லாளராகவும், நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பின் சுற்றுச் சூழல் திட்ட மய்யத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதி நிய மிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டு உள்ளார்.

பொருளாதார வல்லுநரும், வழக்குரைஞருமான சத்யா திரிபாதி, ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும் மேல் அந்த துறை களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிலும், அய்.நா. சபையில் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்து வருகிறார்.

அய்ரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நீடித்த வளர்ச்சி, மனித உரிமைகள் மேம்பாடு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளிலும், திட்டங்களிலும் அவர் பங்கு வகித்தவராவார். வனங்களை அழிப்பதால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான அய்.நா. சிறப்பு மய்யத்தின் இயக்குநராகவும், நிர்வாகத் தலைவராகவும் சத்யா திரிபாதி பதவி வகித்துள்ளார்.

இதைத் தவிர சர்வதேச பொருளாதார அமைப்புகளிலும் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். வணிகவியல் பாடத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் கவுரவப் பட்டங் களைப் பெற்றுள்ள அவர், ஒடிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புகளையும் முடித்தவரா வார்.

வட கொரிய அச்சுறுத்தல் தொடர்கிறது: ஜப்பான்

டோக்கியா, ஆக. 30- வட கொரியாவினால் ஏற்பட்டுள்ள பாது காப்பு அச்சுறுத்தல், தொடர்ந்து நீடித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாடு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜப்பானின் பாதுகாப்புக்கு வட கொரியா ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த நாட்டினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அலட்சியம் செய்ய முடியாததும், உடனடியாக ஏற்படக் கூடியதும் ஆகும்.

இந்தப் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இது பிராந்தியத்துக்கு மட்டுமின்றி, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் கவலையளிக்கக் கூடியது ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner