எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டெஹ்ரான், ஆக. 30- அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை யின் சார்பில் நிர்பந்திக்கப்படு கிறது.

இந்த அறிவிப்பு வெளியா னதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரே நாளில் கடும் வீழ்ச்சியை சந் தித்துள்ளது.

கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலை போனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படு கிறது.

நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகை யில் பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண் டும் என அந்நாட்டின் பொரு ளாதார நிபுனர்களும், எதிர்க் கட்சியினரும் எச்சரித்து வரு கின்றனர்.

ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை அமைச்சர் மசவுத் கர்பா சியன்அய் அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்து நாடா ளுமன்ற உறுப்பினர்கள் சமீபத் தில் வாக்களித்தனர்.

இந்நிலையில், வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எல்லைப்பகுதிகள் வழியாக கடத்தல் உள்ளிட்ட பிரச்சினை கள் தொடர்பாக நாடாளுமன் றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அடுத்தடுத்து அமெரிக்கா விதித்த தடைகளால் பொரு ளாதாரம் நலிவடைந்ததாக அதிபர் ரவுகானி விளக்கம் அளித்தார். பெருகிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், கடத் தலை தடுக்க எல்லைப்பகுதி களில் காவல் பலப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் இவ்விவகாரத் தில் நீதி விசாரணைக்கு வலியு றுத்தி பெரும்பாலான நாடாளு மன்ற உறுப்பினர்கள் வாக்களித் தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கள் நினைத்தால் ரவுகானியை அதிபர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தும் வாக்களிக் கலாம். ஆனால், தற்போதையை சூழ்நிலையில் அத்தகைய தொரு நிலைப்பாட்டை நாடா ளுமன்றம்  எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner