எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.30 சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 2,500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறைப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கியது.

இந்தப் படிப்புகளுக்கு தமிழகத்தில் சென்னை, திருமங்கலம் (மதுரை), பாளையங்கோட்டை, கோட்டார் (நாகர்கோவில்) ஆகிய இடங்களில் மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இந்த 6 அரசு கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுதவிர,  இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநி யோகம் செய்யப்பட்டுள்ளன. இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பங்களைப் பெறுவதற்கு செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 3 மணி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே தேதியில் (செப்.5) மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேசிய திறனாய்வுத் தேர்வு

அனைத்து மாணவர்களும் பங்கேற்க அறிவுறுத்தல்

சென்னை, ஆக.30 தேசிய திறனாய்வுத் தேர்வு குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை தவறாமல் விண்ணப்பிக்கச் செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதைப் பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், இணையதளம் வழியாக, ஆக., 23ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி யுள்ளது. தேர்வெழுத செப். 5 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ. 50 ஆகும். மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும் பத்தாம் வகுப்பு மாண வர்களுக்கு இந்தத் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறி வுறுத்தியுள்ளனர்.

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும், தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு மட்டும் இந்தத் தேர்வு பற்றிய தகவல்களை ஆசிரியர்கள் கூறுவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, பள்ளி கூட்டத்தின் வாயிலாக இதை தெரியப்படுத்தி, அனைத்து மாணவர்களையும் திறனாய்வுத் தேர்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner