எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஆக.30 அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) 40 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படாதது குறித்து மறு ஆய்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதுமட்டுமன்றி பெயர் சேர்க்கப்படாதவர்கள் தங்களது குறைகளையும், ஆட்சேபங்களை யும் வரும் 30-ஆம் தேதி முதல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கையையும் உச்ச நீதிமன் றம் ஒத்திவைத்துள்ளது.

வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த லட்சக் கணக்கான மக்கள் அசாமில் பல ஆண்டுகளாக வசித்து வரு கின்றனர். தலைமுறை கடந்து அங்கு இருப்பதால், அவர்கள் அனைவரும் தங்களை இந்தி யர்கள் என்றே அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், அசாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் எவர்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான வரைவு பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், 2.9 கோடி பேரின் பெயர்கள் குடி மக்கள் பட்டியலில் இருந்தபோதி லும், சந்தேகத்தின் அடிப்படை யில் ஏறத்தாழ 40 லட்சம் பேரின் பெயர்கள் அதில் சேர்க்கப்பட வில்லை. இது சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

இந்நிலையில், இந்த விவ காரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ் வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாத, பிரதி வாதங்களைக் கேட்டறிந்த நீதி பதிகள், சம்பந்தப்பட்ட மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறை களில் பல்வேறு முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்தனர்.

அதன் காரணமாகவே ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்க விருந்த ஆட்சேபங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

மேலும், என்ஆர்சி பட்டி யலில் ஏறத்தாழ 10 சதவீதம் பெயர்கள் (40 லட்சம் பேர்) சேர்க்கப்படாதது தொடர்பாக மறு ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். அது, நீதிமன் றத்தின் திருப்திக்காக மேற்கொள் ளப்படும் ஒரு மாதிரி ஆய்வுதானே தவிர, இந்த விவகாரத்தில் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறுதேதிக்கு வழக்கு விசாரணையை நீதி பதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலின் (என்ஆர்சி) அடிப் படையில் எவர் மீதும் எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், ஏனெனில், அது வெறும் வரைவு அறிக்கை மட்டுமே என்றும் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.

மேலும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்களது குறைகளையும், ஆட்சேபங் களையும் தெரிவிப்பதற்கான சீரான செயல் திட்டத்தை வகுக் குமாறு மத்திய அரசுக்கு அறி வுறுத்தியிருந்தது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner