எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஆக.30 ‘‘சிறிய விவசாயிகள் பெயரை எல்லாம் பட்டியலிடும்போது வங்கிகளில் ரூ.50 கோடிக்கும் மேல் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பெயரை வெளியிடாதது ஏன்?’’ என்று மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணை யம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய நிதியமைச்சகம், மத் திய புள்ளியல் மற்றும் திட்டம் அம லாக்கத்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றிக்கு மத்திய தகவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

வங்கிகளில் ரூ.50 கோடிக்கு மேல் கடன்வாங்கி விட்டு வேண்டுமென்றே மோசடி செய் கிறவர்கள் பட்டியலை மத்திய நிதியமைச்சகம், மத்திய புள் ளியல் மற்றும் திட்டம் அமலாக் கத்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவை வெளிப்படை யாக வெளியிட வேண்டும்.

விவசாயிகளைப்போல் சிறிய அளவு கடன் வாங்கிய வர்கள் பட்டியலை எல்லாம் வெளிப் படையாக வெளியிடும்போது ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களை மட்டும் மறைப்பது ஏன்? ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு ஒருமுறை செட்டில்மென்ட் என்ற பெயரில் அதிக தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, மேலும் பல சாதகமான செயல்களை செய்து கொடுப்பதுடன் அவர்கள் மீண் டும் தவறு செய்யும் வகையில் பெயர்களும் மறைக் கப்படுகின் றன. ஆனால் கடன் செலுத்தாத வர்கள் பட்டியலில் தங்கள் பெயர்களும் இடம் பெற்ற அவ மானத்தில்  1998ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவ சாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

தங்களை வாழ வைத்த, தாங்கள் தாயாக மதிக்கும் விவசாய நிலத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். ஆனால் 7 ஆயிரத்திற்கும் அதிக மான பணக்காரர்கள், படித்த கார்ப்பரேட் தொழில் அதிபர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏமாற்றி விட்டு சென்றது போல் இவர்கள் தாய் நாட்டை விட்டு ஓடவில்லை. எனவே மத்திய நிதியமைச்சகம், மத்திய புள்ளி யல் மற்றும் திட்டம் அம லாக்கத்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவை தங்கள் கடமையின்படி நேரத்திற்கு நேரம் எடுக்கும் முடிவுகளை பொது மக்களுக்கு அறிவிக்க வேண் டும். மேலும் ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் பற்றிய தகவலை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner