எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அகமதாபாத், ஆக. 30 -குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 கரசேவகர் கள் கொல்லப்பட்ட வழக்கில் திங்கட்கிழமை மேலும் இருவ ருக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் கடந்த 27-.2.-2002 அன்று அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்.6 பெட்டி சில நபர் களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.இதில் ஏராளமான கரசேவகர்கள் உள்பட 59 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் சிறுபான்மையினர் சுமார் ஆயிரம் பேர் கொல் லப்பட்டனர். இந்த கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு வழக்கைவிசாரித்த சிறப்பு நீதி மன்றம் 31 பேருக்கு தண்டனை விதித்து கடந்த 2011 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

63 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அதை எதிர்த்தும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதி ராக மாநில அரசு சார்பிலும் குஜ ராத் உயர்நீதிமன்றத்தில் பின்னர் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட் டது. இந்த மனுக்கள் மீதான விசார ணையில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனை யாக குறைக்கப்பட்டது. இந் நிலையில், கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்ட 13 பேரில் 5 பேர், இவ்வழக்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் கடந்த 2015 2016 ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட் டனர். அவர்கள் மீது அகமதாபாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத் தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. பிடிபட்ட 5 பேரை தவிர மேலும் 8 பேர் இன்னும் தலைமறைவாக உள் ளனர். இந்நிலையில், திங்கட் கிழமை இவ்வழக்கில் தீர்ப் பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.சி.வோரா, குற்றம் சாட்டப் பட்ட 5 பேரில் பரூக் பனா மற் றும் இம்ரான் ஷேரு ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப் பளித்தார். மீதமுள்ள 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner