எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.31  பதிவுத் துறை ஆவணப் பதிவின் ஒவ்வொரு நிலைகள் தொடர்பாக,  பொதுமக்களுக்கு செல்பேசி வழியே தகவல் அளிக்கும் வசதி வரும் செப். 3-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பதிவுத் துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: பதிவுத் துறையின் இணைய தளம் வழியாக நேரடியாகவோ அல்லது சொந்தமாக ஆவணம் தயாரிக்கும் நிலையில் இணையதளத்தில் ஆவணத்தின் சுருக் கத்தைக் குறிப்பிட வேண்டும். இந்த நிகழ்வு களின் போது ஆவணதாரர்கள் தங்களது செல்பேசி எண்ணை உள்ளீடு செய்ய மென் பொருளில் இப்போது வழி செய்யப்பட்டுள் ளது. ஆவணதாரர்கள் தங்களது சரியான செல்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

உள்ளீடு செய்தவுடன் ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கான எண்ணை அனுப்புவதற்கான வசதியை அழுத்த வேண்டும். அதனை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இந்த எண் பதிவுத் துறையால் சரிபார்க்கப்பட்டு செல்பேசி எண் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆவணப் பதிவின் 33 வெவ்வேறு நிலை களில் செல்பேசிக்கு குறுஞ்செய்தியானது தமிழ் அல்லது ஆங்கில மொழியில் அனுப்பப்படும். முக்கியமாக பதிவுப் பணி முடிந்தவுடன் ஆவணம் திரும்ப பெற்றுச் செல்வதற்கான தகவல் அடங்கிய குறுஞ்செய்தி ஆவணதாரருக்கு அனுப்பப்படும். ஆவணம் பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கப்பட்டவுடன் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப் பட்ட ஆவணதாரரின் செல்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளப்படும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட தேதியில் ஆவணம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்ட விவரம் உறுதி செய்யப்படும்.

ஆவணம் நிலுவை வைக்கும் நிகழ்வு களில் என்ன காரணத்துக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். கட்ட டத்துடன் கிரையம் செய்யப்படும் நிகழ்வு களில் கட்டடக் களப் பணி மேற்கொண்ட பிறகு இழப்பு உள்ளதா என்ற விவரமும் இழப்பு உள்ளது எனில் கட்ட வேண்டிய தொகை குறித்தும் குறுஞ்செய்தி அனுப் பப்படும்.

மதிப்புக் குறைவாக உள்ள ஆவணங் களில் காரணம் கோரும் தகவல்கள், சந்தை மதிப்பு நிர்ணய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவரங்கள், செலுத்த வேண்டிய குறைவு முத்திரைத் தீர்வு, குறைவு பதிவுக் கட்டணம் போன்ற விவரங்களும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆவணதாரரின்  செல்பேசி எண்ணைத் தவிர்த்து வேறொருவரின் செல்பேசி உட்புகுத்தும் நிலையில், குறுஞ்செய்திகள் அனைத்தும் பதிவிடப்பட்ட எண்ணுக்கே சென்றடையும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner