எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.31  அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட விலையில்லா பொருள்கள்  டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில்  ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு புத்தகப்பை,  காலணி,  கிரையான்கள்,  வண் ணப் பென்சில்கள் உள்ளிட்ட 9 விலையில்லாப் பொருள்கள் தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் கொள்முதல் செய்யப் பட்டு வழங்கப்பட்டு வரு கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பொருள்கள் கல்வி யாண்டின் இறுதிக் கட்டத்தில் வழங்கப்பட்டு வந்தன.  இத னால் அந்தப் பொருள்களை கல்வியாண்டில் தொடக்கத் திலோ அல்லது இடைப்பட்ட காலத்திலோ வழங்க வேண் டும் என பெற்றோர் வலியுறுத் தினர்.  இதைத் தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் முதலே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,  விலையில்லா பொருள்களை வழங்குவதற் காக  பல கட்டங்களாக பணி கள் நடைபெற்று வருகின்றன.   கடும் தர ஆய்வுகளுக்குப் பின் னரே சம்பந்தப்பட்ட நிறுவ னங்களிடமிருந்து மாணவர் களுக்கு வழங்கப்படும் பொருள்களை கொள்முதல் செய்ய முடியும்.  தற்போதைய சூழலில் 60 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டன.  இதைத் தொடர்ந்து 1, 2 வகுப் புகளில் படிக்கும் 9 லட்சம் மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் கிரையான் பென்சில் களும்,  ஒன்றுமுதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 56 லட்சம் மாணவர்களுக்கு காலணிகளும்,  ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப்பையும் டிசம்பர் மாதத் துக்குள் வழங்கப்படும் என் றனர்.  அதே போன்று மலைப் பகுதிகளில் பயன்படுத்தும் பிரத்யேக காலணிகள்,  ஜியோ மெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருள்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்றனர்.

 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு

மேட்டூர், ஆக.31 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கனஅடி யாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், கபினி,  கிருஷ்ணராஜசாகர் அணைகளி லிருந்து உபரிநீர் வெளியேற் றப்படுகிறது.  உபரிநீர் வரத்து காரணமாக வியாழக்கிழமை காலை மேட் டூர் அணைக்கு நொடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் நொடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner