எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுச்சேரி, ஆக.31 மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக் குக் காரணம் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: பண மதிப்பிழப்பு நட வடிக்கையால் நாட்டுக்கு பேரி ழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பெட்ரோலிய பொருள்களின் விலை வரலாறு காணாத வகை யில் உயர்ந்துள்ளது. வியாழக் கிழமை நிலவரப்படி மும்பை யில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.73, பெட்ரோல் விலை ரூ.84-ஆகவும், சென்னையில் டீசல் விலை ரூ.72 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.80 ஆகவும் இருந்தது. இதுபோன்ற விலை உயர்வு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

இந்த விலை உயர்வால் அத் தியாவசிய பொருள்கள் விலை உயரும். ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் உயரும் போது போராட்டம் நடத்திய பாஜக இதற்கு பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். அதேபோல, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வியாழக் கிழமை ரூ.70.63 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த மதிப்பு ரூ.60-ஆக இருந்தது. ரூபாய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நாட்டின் ஏற்றுமதி அதிகரித் தாலும், அத்தியாவசிய பொருள் களின் விலை தொடர்ந்து உயரும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியை தவறான முறையில் அமல்படுத்தியது போன்ற மத் திய அரசின் தவறான பொருளா தார கொள்கைதான் இதற்கு முக்கி யக் காரணம் என்றார் நாராயணசாமி.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner