எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வேலூர், ஆக.31 ஊரக வளர்ச்சித்துறையில் இந்திரா நினைவு குடியிருப்பு, பசுமை வீடுகள்,  ஊராட்சி கட்ட டங்கள்,  காந்தி தேசிய  ஊரக வாழ்வாதார திட்டம் என்று மத்திய, மாநில அரசின் திட்டப்பணிகள்  மேற்கொள்ளப் படுகின்றன.

இத்திட்ட பணிகளுக்கான மதிப்பீட்டை தயார் செய்து அதை  செயல்படுத்தும் அதிகாரம் ஓவர்சீயர்கள், உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக  பொறியாளர்கள் வசம் உள்ளது. திட்டப் பணிகளுக்கான திட்ட மதிப்பீடு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மூலப்பொருட்களின் மதிப்பை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. இது பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப திட்ட மதிப்பீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித்துறையில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் தற்போது அரசு ஊரக வளர்ச்சித்துறையில் திட்டம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான மதிப்பீட்டு வரம்பை உயர்த்தி உத்தரவிட்டு அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.  அதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் திட்ட மதிப்பீட்டு வரம்பை  ஓவர்சீயர்களுக்கு 1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், உதவி செயற்பொறியாளருக்கு 2 லட்சத்தில் இருந்து 10 லட்சமாகவும், நிர்வாக பொறியாளருக்கு 10 லட்சத்தில் இருந்து 50 லட்சமாகவும் திட்டம் செயல்படுத்துதல் மதிப்பீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1 : சிறப்புத் துணைத் தேர்வில்  மறுமதிப்பீடு

செப்.3,4 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக.31 தமிழகத்தில் கடந்த ஜூன்,  ஜூலை மாதங்களில் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண்,  பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப் பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து,  இரு நகல்கள் எடுத்து செப்.3-ஆம் தேதி முதல் செப்.4 வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  மறுகூட்டல் மற்றும் மறுமதிப் பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.505,  இரு தாள் கொண்ட பாடம்- ரூ.1,010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)

ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205,  இரு தாள் கொண்ட பாடம் ரூ.305 (மொழிப்பாடம்,  ஆங்கிலம் மற்றும் உயிரியல்).  இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்களுக்கு

பட்டம் வழங்கல்!

சென்னை, ஆக.31  "வளர்ச்சி மற்றும் தாராளமயமாக்கல் சகாப்தத்தில் இன்றைய புதிய தலைமுறை பொறியாளர்கள் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்" என  எஸ்.எஸ். என் பொறியியல் கல்லூரியில் பதினெட்டாம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் அதன் சென்னை வளாகத்தில் மாணவர் களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் பொழுது அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எம்.கே.சுரப்பா கூறினார்.

மொத்தம் 1180 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது இதில் 832 இளங்கலை பட்டதாரி மாணவர்கள் மற்றும் 348 முதுகலை பட்டதாரி மாணவர்கள் இருந்தனர் இதில் மொத்தம் 192 மாணவர்கள் முதன்மை வகுப்பு பட்டம் பெற்றனர்

இக்கல்வி நிறுவனத்தின் தலைவர் கலா விஜயகுமார், கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ். சாலிவாகனன் மற்றும்  பி. சிறீவாசன், டீன் மேனேஜ்மென்ட் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner