எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, ஆக. 31- வங்கதேசத் தில், தனியார் தொலைக் காட்சியில் பணியாற்றி வந்த பெண் செய்தியாளர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சுபர்ணா அக்தர் நோடி (32) என்ற அவர், பவ்னா மாவட்டத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் சுமார் 12 மர்ம நபர்களால் திங்கள் கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.

வங்கதேசத்தில் சீர்திருத்தக் கருத்துகளைக் கூறி வரும் ஊடகவியலாளர்கள் மதவெறியர்களால் வெட்டிக் கொல் லப்படுவது அடிக்கடி நடந்தாலும், இந்தக் கொலைக்கு சுபர்ணாவிடமிருந்து பிரிந்து வாழும் அவரது கணவர் காரணமாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகிக் கின்றனர்.

வெள்ளை மாளிகை ஆலோசகர்

விரைவில் வெளியேறுகிறார் - டிரம்ப்

வாசிங்டன், ஆக. 31- அமெரிக் காவில் 2016ஆ-ம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற வும், ஜனநாயக கட்சி வேட் பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரசியா நேரடி யாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது.

இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர். இந்நிலை யில், வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணி புரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேற உள்ளார். நான் அவருடன் நீண்ட நாள்கள் பணிபுரிந்து வந்துள்ளேன். அவரது பணி செய்யும் திறமை மிகவும் பாராட்டுக்கு உரியது என பதிவிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner