எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லாகூர், ஆக. 31- இந்தியா -- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர் பாக, இரு நாடுகளுக்கு  இடை யேயான பேச்சுவார்த்தை புதன் கிழமை தொடங்கியது. பாகிஸ் தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, இரு நாடு களுக்கிடையே நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.

சிந்து நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக, பாகிஸ்தான் சிந்து நதி ஆணையர் சயீது மெஹர் அலி ஷாவுடன் 2 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்த இந்தி யாவின் சிந்து நதி ஆணையர் பி.கே.சக்ஸனா தலைமையி லான 9 பேர் கொண்ட குழு வினர், செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் சென்றடைந்தனர். கடந்த 1960-ஆம் ஆண்டு கையெ ழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளுக்கு மிடையே ஆண்டுக்கு இரு முறை பேச்சுவார்த்தை நடக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், பாகிஸ்தானில் நீடித்து வந்த பல்வேறு அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பேச்சுவார்த்தை நடைபெறா மல் இருந்தது.

இந்நிலையில், இரு நாடு களுக்கிடையேயான பேச்சு வார்த்தை புதன்கிழமை தொடங் கியது. இதில் இரு நாடுகளும் தங்களது அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட இருப்பதா கவும் தகவலறிந்த வட்டாரங் கள் தெரிவித்தன.

சிந்து நதியின் துணை நதி களில் ஒன்றான செனாப் மீது, இந்தியாவின் சார்பில் கட்டப் பட்டு வரும் 1,000 மெகா வாட் திறனுள்ள பகல்துல் நீர்மின் நிலையம் மற்றும் 40 மெகா வாட் திறனுள்ள கீழ் கால்னாய் நீர்மின் நிலையம் ஆகியவை குறித்து இந்தியாவிடம் முறையிட இருப்பதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். சிந்து நதி நீர்ப் பங்கீடு தொடர் பாக இரு நாடுகளுக்குமிடை யேயான கடைசி பேச்சு வார்த்தை கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற நிலை யில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இரு நாடுகளுக்குமிடையே அதிகா ரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங் கியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவினைப் புதுப்பிக்க வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

பாகிஸ்தான் அதிபர் தேர்தலிலும்

இம்ரான் கட்சி வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு

இசுலாமாபாத், ஆக. 31- பாகிஸ் தான் அதிபர் மம்னூன் உசேனின் அய்ந்தாண்டு பதவிக் காலம் செப்டம்பர் 9ஆ-ம் தேதியுடன் நிறைவடைவதால் அந்த  பதவிக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ள இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அதிபர் வேட்பாளராக  டாக்டர் ஆரிப் ஆல்வி நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் நடத்திவந்த பேச்சுவார்த்தை கடந்த 25-ஆம் தேதி தோல்வியில் முடிந்தது.

எனவே, பாகிஸ்தான் மக் கள் கட்சியை சேர்ந்த அய்ட் ஸாஸ் அஹ்ஸன் மற்றும் ஜாமி யத் உலமா இ இசுலாம் கட்சித் தலைவர் மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிபர் பத விக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக் களின் பரிசீலனை நேற்று முடி வடைந்து மூன்று மனுக்களும் ஏற்கப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் சர்தார் மொஹம்மத் ராஸாகான் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆளுங்கட்சி வேட்பாளரான டாக்டர் ஆரிப் ஆல்வி எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற் பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்றத்தின் இரு அவை களை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner