எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஆக.31 'ககன்யான்' திட்டத்தின் கீழ், வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இத்திட்டம் தொடர்பாக டில்லியில்  நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அணுசக்தி ஆற்றல் மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படும். வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

இவர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு, ககன்யான்' திட்டம் இரண்டு முறை ஆளில்லாமல் செயல்படுத் தப்படும். இந்தத் திட்டம் 2022-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் வீரர்கள்

7 நாள்கள் வரை இருப்பார்கள். இவர்கள் செல்லும் விண்கலம் புவி தாழ் வட்டபாதையின் 300- & 400 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படும். இந்த விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த ரூ.10ஆயிரம் கோடி வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சியில் இஸ்ரோ, கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தங்களின் பங்களிப்பை வழங்கும்.

இந்தத் திட்டம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4-ஆவது நாடாக இந்தியாவை விளங்க வைக்கும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பு கோரப்படும் என்றார் ஜிதேந்திர சிங்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியாதவது:

கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவாற்றுவோம்.

16 நிமிடங்களுக்குள் விண்வெளியில் விண்கலம் நிலை நிறுத்தப்படும். அங்கு 5 முதல் 7 தினங்கள் வரை வீரர்கள் இருப்பார்கள். பின்னர், விண்கலம் அரபிக் கடலில் 36 நிமிடங் களுக்குள் விழவைக்கப்படும்.

அங்கிருந்து 15 முதல் 20 தினங்களுக்குள் அந்த விண்கலம் மீட்கப்படும்.

இந்தத் திட்டத்தால் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மேம்படும். ககன்யான்' திட்டத்தின் கீழ் இஸ்ரோ ஊழியர்கள் 861 பேர் உள்பட 15,000 பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

விண்வெளிக்கு செல்லும் வீரர்களும், வீராங்கனையும் இந்திய விமானப் படை மற்றும் இஸ்ரோவிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு தேவையான உடைகள் தயாராகி விட்டது. வீரர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடு களிலும் பயிற்சி அளிக்கப்படும். 2022-ஆம் ஆண்டுக்குள் 19 திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தும். சந்திரயான்-2 திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நிறைவேற்றப்படும். 40 தினங்களில் சந்திரயான் செயற்கைக்கோள் நிலவை அடையும். ஜிசாட்-19, ஜிசாட்-29, ஜிசாட்-11, ஜிசாட்-20 ஆகிய செயற்கைக்கோள்களை அனுப்பும் திட்டமும் நிறைவேற்றப்படும் என்றார் சிவன்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner