எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காசி, ஆக. 31 -உலகில் பெண்ணியம் ஒழிய வேண் டும் என்று, 150 ஆண்கள் ஒன்று சேர்ந்து காசியிலுள்ள கங்கைக் கரையில் பூஜை நடத்தி, கோமாளித்தனம் செய்துள்ளனர். ஆணுக்குப் பெண் சமமானவள் அல்ல என்ற கோட்பாடு, மதங் களின் வழியாக, சமூக, பண்பாட்டு பழக்க வழக்கங்களின் வழியாக பல ஆயிரம் ஆண்டு களாக கட்டமைக்கப்பட்டு இருந்தது. பெண் படிக்க முடியாது; தனியாக சிந்திக்க முடியாது; செயல் பட முடியாது; தனித்த விருப்பங்களை கொண்டிருக்கக் கூடாது; ஒரு பெண் என்பவள் ஆணின் உடமை மற்றும் பிள்ளை பெற்றுத்தருவதற்கு உரிய- ரத்தமும் சதையுமுள்ள ஒரு பொருள் மட்டுமே என்று கற் பிக்கப்பட்டு வந்தது.

இன்றோ உயர்கல்வி, மருத்து வம், அறிவியல், அரசியல், பொருளாதாரம், இராணுவம், விளையாட்டு என பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில துறைகளில் ஆண்களைக் காட்டிலும் திறமையில் விஞ்சி நிற்கிறார்கள். ஆனால், இது எளிதில் நடந்த விஷயமல்ல. இந்த உரிமையை அடைவதற்கு  நடத்திய போராட்டங்கள் எண் ணிலடங்காதவை. ஆனால் இன் னும் சமூகத்தளத்தில் பெண்கள், ஆண்களுக்கு கீழாகவே வைக் கப்பட்டிருக்கின்றனர்.  அதை எதிர்த்து போராட்டங்களும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், இந்திய குடும்பங்களை காப்பாற்றுவோம் இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த உலகில் இருந்து பெண்ணியத்தை அழிக்க வேண்டும் என்று யாகம் ஒன்றை நடத்தி கோமாளித்தனம் செய்துள்ளனர்.மனைவி கொடுத்த வன்கொடுமைப் புகாரால் பாதிக் கப்பட்டனர் என்று கூறிக் கொண்டு, ராஜேஷ் வக்காரியா என்ற நபர்தான், இந்த குடும் பங்களைக் காப்பாற்றுவோம் என்று இயக்கத்தை 2005-இல் தொடங்கியுள்ளார்.

அதன்பின்னர் கடந்த 13 ஆண்டுகளில் 4 ஆயிரம் பேர் இதில் உறுப்பினர்களாக இணைந் திருப்பதாகவும், இந்தியாமுழுக்க 200-க்கும் அதிகமான அலுவல கங்கள் இதற்காக செயல்படுவ தாகவும் கூறப்படுகிறது.அனைத் துச் சட்டங்களும் பெண்களுக்கே ஆதரவாக உள்ளன; எனவே, அந்த சட்டங்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் இவர் களின் நோக்கமாம். வருடம் ஒருமுறை சூர்ப்பனகை உருவ பொம்மை செய்து, அதன் மூக்கை வெட்டும் நிகழ்ச்சிநடத்தும் அள விற்கு பெண்கள் மீது வன் மம் கொண்டவர்களாக இருக் கிறார்கள்.

இந்த வன்மத்தின் ஒரு பகுதி யாகவே, மனைவியிடம் மண விலக்கு பெற்ற- இந்த அமைப் பைச் சேர்ந்த 150 ஆண்கள் சேர்ந்து, தங்களது பழைய திரு மண தோஷம் போக வேண்டும் என்று, காசிகங்கைக் கரையில் பூஜை நடத்தி உள்ளனர். 150 ஆண்களும் ஒரே நேரத்தில் கங்கை ஆற்றில் இறங்கி, பெண் ணியவாதம் ஒழியவேண்டும் என்று ஒரே குரலில் முழக்கம் போட்டுள்ளனர். 100 முறை திரும்பத் திரும்ப கூவியுள்ளனர். கங்கைக் கரையில் நடந்த இந்த கோமாளித்தனம், சமூகவலைத் தளங்கள் மூலமாகஉலகம் முழு வதும் பரவி, சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு புறத்தில் வக்கரித்த ஆண்கள் இந்தியாவில் இன்னும் இருக்கி றார்கள் என்ற உண்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner