எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவனந்தபுரம், ஆக.31 கேரள வெள்ள நிவாரண நிதிக்கு,பாஜக சார்பில் ரூ.25 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள் ளது என்று பாஜகவினர் சமூகவலைத் தளங்களில் பொய்ப்பிரச்சாரம் மேற் கொண்டது அம்பலமாகியுள்ளது.

கேரளம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ள போது, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளத்திற்கு அளித்து வருகின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக-வினர் உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் மட்டும் கேரள வெள்ளப் பாதிப்பைக் கொண்டாடினர். கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும், அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும் தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று வன்மம் கக்கினர். கேரள நிவாரண நிதிக்குபாஜகவினர் நிதி அளிக்காதது மட்டுமன்றி, மற்றவர்களும் நிதியளிக்க வேண்டாம் என்று தடுத்த சம்பவங்களும் அரங்கேறின.இது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பாஜக-வின் உண்மை முகம் அறியாமல் இதுவரை அக்கட்சியில் இருந்த பலர், கூட்டம்கூட்டமாக அங் கிருந்து வெளியேறியதும் நடந்தது. தற்போது கேரள மக்களை சமாளிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜகவினர் வழக்கம்போல, போட்டோஷாப் கலை மூலம் போலியான புகைப்படங்களை வெளியிட்டு பொய்ப்பிரச் சாரங்களை அவிழ்த்துவிடத் துவங்கியுள் ளனர். அதில் ஒன்றாகத்தான், பாஜகவைச் சேர்ந்த சிறீதரன் நாயர் என்பவர், அவரது முகநூலில் பாஜக அமைச்சர்களும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 கோடி ரூபாயை வழங்கி யுள்ளனர்  என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை உலவவிட்டார்.அந்த புகைப்படத்தில், பாஜக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பாஜக எம்.பி. முரளிதரன் ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

எப்போது எப்போது என்று எதிர்பார்த்த கேரள பாஜக-வினரும், சிறீதரன்நாயர் வெளியிட்ட புகைப் படத்தை, இஷ்டத்திற்கு முகநூலிலும், ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து, பெருமை பீற்ற ஆரம் பித்தனர். இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நிதியளித்தது உண்மைதானா? என்று சமூகவலைத் தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

அதற்கேற்பவே, கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பது போல, பாஜகவினரின் புளுகுக் கதை எட்டு மணி நேரம்கூட நீடிக்கவில்லை. மத்திய அமைச்சர் கண்ணந்தானம் தலைமையில் முதல்வரிடம் நிதியளிப் பது போன்ற புகைப்படம் உண்மைதான் எனவும், ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் சார்பிலான நிதியளிப்பில்தான் அவர் கலந்து கொண் டிருக்கிறார் என்பதும் சீக்கிரத்திலேயே வெளிப்பட்டு விட்டது.

படத்தை வெளியிட்ட சிறீதரன் நாயர்,கவனமாக இந்துஸ்தான் பெட்ரோலியநிறுவனத்தின் அதிகாரிகளை புகைப் படத்திலிருந்து வெட்டியெறிந்துவிட்டு, அமைச் சர் கண்ணந்தானமும், பாஜக எம்.பி. முரளிதரனும் இருப்பது போன்றபடத்தை மட்டும் போட்டு- பாஜக சார்பில்ரூ. 25 கோடி நிதி என்று கூறியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

பாஜக சார்பில் ஒரு பைசா கூட நிதி அளிக்கப்படாத நிலையில், சிறீதரன் நாயர் உள்ளிட்ட பாஜகவினர் செய்த பொய்ப்பிரச்சாரம், கேரள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், தற்போது பாஜக-வுக்கு எதிராகவே பூமாராங் ஆக திரும்பியுள்ளது.

குஜராத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு மட்டும் சலுகை அளிக்கும் மோடி அரசு

புதுடில்லி, ஆக.31 தொடர் நஷ்டத்தில் இயங்கும் குஜராத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு மட்டும் மேலும் மேலும் நிதியுதவி அளித்து காப்பாற்றத் துடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குஜராத் அரசுக்கு சொந்தமானது, குஜராத் பெட்ரோ லியம் நிறுவனம்  ஆகும். இந்த நிறுவனம் தொடர் நட்டத்தில் இயங்கி வருகிறது. இதனைச் சமாளிக்க பல்வேறு வங்கிகளில் கடனை பெற்றும் நிதிநிலைமை சீராகவில்லை. தற்போது 12 ஆயிரத்து 519 கோடி ரூபாய் அளவிற்கு கடனுடன் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பல தவணைகள் கால அவகாசம் கொடுத்தும், கடனைத் திரும்பிச் செலுத்த முடியவில்லை.

அண்மையில் இப்பிரச்சனையில் தலையிட்ட ரிசர்வ் வங்கி, குஜராத் பெட்ரோலியம் நிறுவனத்தை திவாலான தாக அறிவித்து, அதன் சொத்துக்களை வங்கிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கியது. இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பிப்பதற்காக அலகா பாத் நீதிமன்றத்தையும் அணுகியது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசே எதிர்ப்பு தெரிவித்தி ருப்பது, ரிசர்வ் வங்கியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏனெனில், ரிசர்வ் வங்கியின் கடன்வசூல் நடைமுறையில் மத்திய அரசு தலையிடுவது, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதுதான் அதற்கு காரணமாகும்.மத்திய அரசின் இந்த தலையீட்டுக்கு, காங்கிரசு தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கு எதிராக மத்திய அரசே அறிக்கை அளித்தது இதுவரை நிகழாத ஒன்று என கூறியிருக்கும் ஜெய்ராம் ரமேஷ், ஏற்கெனவே ரூ. 20 ஆயிரம் கோடியை, மத்திய அரசு குஜராத் பெட்ரோலியம் நிறு வனத்திற்கு வழங்கியும் அந்த நிறுவனம் மீளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற வேண்டியது தான். அவற்றை திவால் என்று அறிவிக்காமல் தொடர்ந்து இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்தான். ஆனால், நாடு முழுவதும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இந்த வகையில் காப் பாற்றப்பட வேண்டிய நிலையில்தான் உள்ளன. ஆனால், மோடி அரசோ குஜராத் பெட்ரோலிய நிறுவ னத்தை மட்டும் காப்பாற்ற முயல்வது, சலுகைகள் அளிப்பது பாரபட்சமானது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner