எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, செப். 1- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் தூத் துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதா வது:

மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்து முறையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனக்கு டாக் டர் பட்டம் வழங்கியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்கிற கருத்துக்கும், என்னுடைய ஆய்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கேரளாவில் மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவியாக ரூ.15 லட்சத்துகான காசோலையை திருவனந்தபுரத்தில் முதல் அமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து வழங்கியுள்ளோம். மேலும் ரூ.15 லட்சம் நிவாரண பொருட்கள் மூனாறு உள்ளிட்ட பகுதிகளில் வழங்க உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தமிழர் அல்லாத ஒரு நீதிபதியை நிய மிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர் லைட் ஆலை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் விருப்பப்படி தமிழர் அல்லாத நீதிபதியை நியமித்து இருப்பது, எந்த அள வுக்கு நீதிமன்றமும், ஆட்சியா ளர்களும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு துணை போகி றார்கள் என்பதை உணர்த்துகி றது.

இவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்ப தற்கு ஏதுவான சூழலை உரு வாக்கி தருகிறார்கள் என்று மத் திய, மாநில அரசுக்கு விடு தலை சிறுத்தைகள் கட்சி கண் டனத்தை தெரிவிக்கிறது. தமி ழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, தமிழர் ஒருவரை இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்க மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner