எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேட்டூர், செப். 1- காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பி உள்ளது.

கடந்த இரு நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், நேற்று முன்தினம் விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 17,500 கன அடியாக அதிகரித்தது. நேற்று அதிகாலை 4ஆவது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியது. காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற் காகவும், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6,800 கனஅடியில் இருந்து 17,800 கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner