எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 1- செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகள் செயல் படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு 6 நாள்கள் விடுமுறை என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருவது குறித்தும், அதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளது குறித்தும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும். வங்கி களின் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது.

வங்கிகளுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2-ஆவது சனிக்கிழமையான செப்டம்பர் 8-ஆம் தேதி விடுமுறை தினமாகும். செப்டம்பர் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) நாடு முழு வதும் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்காது. ஆனால், அந்த தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே வங்கிகள் மூடியிருக்கும். இந்த நாள்களில் ஏடிஎம் மய்யங் கள் முழு வீச்சில் இயங்கும். ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது. அனைத்து ஏடிஎம்களிலும் போது மான பணம் நிரப்பப்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொத்துவரி விவரம் தெரிவிக்க

காலக்கெடு நீட்டிப்பு

சென்னை, செப். 1- சொத்து வரி சீராய்வு தொடர்பான சுய மதிப் பீட்டு விவர படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 16 -ஆம் தேதி வரை பெருநகர சென்னை மாநகராட்சி நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமை யாளர்கள், தங்கள் சொத்து வரி சீராய்வு தொடர்பான சுய மதிப்பீட்டு விவர படிவத்தை தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31 -ஆம் தேதி கடைசி தினமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களாலும், இதர மாவட் டங்கள், வெளியூர்களில் வசிக்கும் சொத்து உரிமையாளர்களாலும் கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, சொத்துவரி விவர அறிக்கையை ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட அனைத்து வழி முறைகளின்படி செப்டம்பர் 16 -ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.

சொத்து விவர சுய மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்யாத சொத்து உரிமையாளர்கள், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தி, தவறாமல் தங்களது சொத்து விவர சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, சம்மந்தப் பட்ட அலுவலகங்களில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:

தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை, செ. 1- 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன், ஜூலை மாதம் 23ஆம் தேதி விசாரணையை தொடங்கினார். அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், வெள்ளியன்று (ஆக. 31) பேரவைத் தலைவர் தரப்பு வழக்குரைஞர் தனது வாதத்தை நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner