எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வியன்னா, செப்.1 வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும்

இடையிலான அணுசக்தி ஒப்பந்த அம்சங்களை ஈரான் தொடர்ந்து கடைபிடித்து வருவதாக அய்.நா.வின் அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பான அய்ஏஇஏ நற்சான்று அளித்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தை கைவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள் ளதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அய்ஏஇஏ இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து, தேவையான இடங்களில் சென்று ஆய்வு செய்ய அய்ஏஇஏ-வுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அணுசக்திக்குத் தேவையான கன நீர் ஆகியவற்றின் இருப்பை ஈரான் கடந்த மே மாதத்தில் இருந்ததைவிட கொஞ்சம் அதிகரித்துள்ளது.

எனினும், அந்த அளவு 2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள வரம்புக்குள்ளாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனைக் கைவிடுவதற்குத் தயாராக இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி புதன்கிழமை கூறியிருந்தார்.

இந்தச் சூழலில், அய்ஏஇஏ இந்த அறிக்கையை வெளியிட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner